பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

91

பறவை இப்போதும் திடீரென அவனை விட்டுச் சென்றது. அது தவளையிடம் போய் விவரம் தெரிவித்தது. பின் தவளையைத் தூக்கிக் கொண்டுபோய்க் கிணற்றில் விட்டது. தவளை மிஞ்சியைக் கொண்டு வந்தது. பறவை, தவளையைத் திரும்ப அது இருக்கும் இடத்தில் கொண்டு போய்விட்டது. மிஞ்சியுடன் நம்பியின் பக்கத்தில் குந்திற்று.

நம்பியின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவன் பறவையை இன்னும் ஆதரவுடன் தடவிக் கொடுத்தான்.

நம்பி

ரண்டாவது தடவையும் சொன்னபடி செய்துவிட்டது கண்டு மாமன் புழுங்கினான். இத்தடவை அவன் சாக்குப்போக்கு ஒன்றும் சொல்லவில்லை. "நாகுவை நான் உனக்கு தர முடியாது. அத்துடன், இன்றிரவே நீ இந்த ஊரை விட்டுப் போய்விட வேண்டும். இல்லாவிட்டால் அரசியின் மஞ்சளைக் காட்டி உன்னைக் காவலரிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன்” என்றான்.

நம்பி கவலை தோய்ந்த முகத்துடன் மாமன் வீட்டிலிருந்து வெளியே வந்தான். “வாழ்ந்தால், நாகுவை மணம் செய்து கொண்டு வாழ வேண்டும். இல்லாவிட்டால், காவற் கூடத்துக்குப் போனாலென்ன, எங்கே போனாலென்ன!" என்று அவன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டு நடந்தான்.

அவன் முன் ஒரு பூ வந்து விழுந்தது.

அவன் திரும்பிப் பார்த்தான்.

பலகணியில் நாகுவந்து நின்றிருந்தாள்.

அவள் கண்கள் கலங்கி இருந்தன.

"நம்பி! அப்பா மனம் உன்மீது ஏனோ கல்லாய் இருக்கிறது. ஆனால், நீ இல்லாமல் நான் வாழ முடியாது. இன்றிரவே என்னை இட்டுக் கொண்டு போய்விடு. நடு இரவில் முழுநிலா உச்சிக்கு

டு

வரும். அப்போது நான் தோட்டக் கதவின் பக்கம் வந்து உனக்காகக் காத்திருப்பேன்” என்றாள்.

66

"சரி" என்று நம்பி கூறிவிட்டு, வீட்டுக்கு வந்தான்.

நாகுவின் பாசம் அவனுக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனால் “ஓர் இரவுக்குள் நாகுவுடன் எப்படித் தப்பி ஓடுவது” என்று அவன்