பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

அவன் மேலும் நடந்தான்.

95

வெயில் ஏறிற்று. அவன் விரைந்து நடக்க முயன்றான்.

மீண்டும் இரங்கத்தக்க ஒரு காட்சி அவனைத் தடுத்தது.

வல்லூற்றினால் அடிக்கப்பட்ட ஒரு பச்சைக்கிளி சிறகிழந்து துடித்தது. அவனுக்கு இன்னது செய்வது என்று தெரியவில்லை. இத்தடவை அவன் சிறிதும் தயங்காமல் ஒரு மாங்கனியை அதற்குக் கொடுத்தான்.

பச்சைக்கிளி அதை உண்டபின் சிறிது தெம்படைந்தது. அது நன்றியுடன் அவன் மடியில் வந்து உட்கார்ந்தது. “நீ திரும்பி வரும்போது நான் இங்கே இருப்பேன். நான் பசையற்ற ஒரு பச்சைக் கிளிதான். ஆனாலும், உனக்கு என்னால் இயன்ற பொருள் தந்து உன்னை மகிழ்விப்பேன்” என்று கூறிற்று.

66

'ஒரு மாங்கனியை ஆண்டவனுக்குக் கொண்டு போய்க் கொடுத்து என்ன பயன்? திரும்பிவிடலாமா?” என்று செம்பியன் ஒரு கணம் நினைத்தாள். ஆனால், நன்றியுள்ள கிளிக்குத் தன் உண்மை நிலைமை தெரிந்தால் வருத்தம் ஏற்படுமே என்று அவன் மேலும் நடந்தான்.

பொழுது உச்சியை நெருங்கிற்று. அவனை அறியாமல் அவன் கால்கள் விரைந்தன. ஆனால் திடீரென்று அவன் கால்கள் நின்றன. அவன் காலடியில் ஒரு பாம்பு சுழன்று சுழன்று வந்தது.

"சேந்தனைப் பெறவே முடியாது. ஆண்டவனுக்காக வைத்திருந்த கனிகளில் இரண்டை இழந்தாய்விட்டது. இனி நடந்தென்ன, நடவாமல் இருந்தென்ன? பாம்பு நம்மைக் கொன்றால் நாமே...!" என்று அவன் மனந்தேறிப் பாம்பின் அருகில் சென்றான்.

பாம்பு கடிக்கவில்லை. அது வாயைப் பிளந்து பிளந்து காட்டிற்று.அதுவும் பசியாலும், விடாயாலும்தான் வருந்துகிறது என்பதை அவன் கண்டான்.

அவன் கையிலிருந்த கடைசி மாங்கனி; பாம்பின் துயர் தீர்த்தது.

"குழந்தை வரம் தேடச் சென்று, கொண்டவனை இழந்த கதையாயிற்று. மாங்கனிகள் முன்றையும் இழந்தபின்