பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

99

பின் அதைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு ஆடைகளைத் துவைத்தாள்.

புத்தாடையுடன் அவள் அரண்மனைக்கு வந்தபோது அவளை யாரும் அடையாளம் அறியவில்லை. ஆனால், அவள் யார் என்று தெரிய வந்தபின் எல்லாரும் வியப்படைந்தனர். அவள் முகர்ந்த மலரை முகர்ந்து பல கிழவியரும் அரசியும் அரசனும் இளமை பெற்றனர்.

மணமகன், மணமகளுக்கு உயிர்கொடுத்ததுடன், தமக்கு ளமையும் தந்தானென்று அரசனும் அரசியும் மகிழ்ந்தார்கள்.

செம்பியனுக்கும் இளவரசிக்கும் மணம் இனிது முடிந்தது. செம்பியன் மணமானபின்னும் முகவாட்டமாயிருப்பது கண்ட இளவரசி, அவன் வரலாறு முழுவதும் கேட்டறிந்தாள்.

பாம்பு கொடுத்த மணியின் கதையை அவன் கூறினான். “கிளி என்ன கொடுத்தது? குரங்கு என்ன கொடுத்தது?" என்று அவள் கேட்டாள்.

அவன்.

“தெரியவில்லை. எதுவும் தந்ததாக நினைவில்லை” என்றான்

இளவரசி அறிவுடையவள், “கிழவியைக் குமரியாக்கிய மலரைக் கிளியே கொடுத்திருக்க வேண்டும். அதை மறதியாக அவன் முந்தானையில் முடிந்திருக்க வேண்டும்" என்று அவள் ஊகித்தாள்.

"குரங்கு கொடுத்த பொருளும் இதுபோல விலை மிக்கதாயிருக்க வேண்டும். அதையும் அவன் மறதியாக எங்காவது வைத்திருக்கக் கூடும் என்று அவள் கருதினாள்.

அவள் எங்கும் தேடினாள். சம்புடத்திலிருந்த அருநெல்லிக் கனி அவளுக்கு அகப்பட்டது.

அவள் அதைக் கையில் வைத்துக் கொண்டு செம்பியனிடம் சென்றாள். “அன்பரே! உமக்கு என்ன கிடைத்தால் கவலை தீரும்?” என்று கேட்டாள்.

“என் தம்பி சேந்தன் பிழைத்து வந்தால், என் கவலை தீரும்” என்றான் அவன்.