பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 219

என்னை நன்கறிந்த நண்பனாகிய உனக்கு நான் சொல்ல வேண்டுவதில்லை. ஆனால், கடவுள் அந்தப் பழிகள் முற்றிலும் நிறைவேறாமல் காத்தமைக்கு மகிழ்கிறேன்.

“சிற்றப்பாவும் சின்னம்மாவும் உயிருடனிருந்தால், அவர்கள் கால்களில் விழுந்து தந்தையை மன்னிக்கும்படி வேண்டி அவர்கள் செல்வத்துடன் என் செல்வத்தையும் தங்கையர்கட்கே கொடுப்பேன்” என்றான்.

வெண்ணிலாவும் அவள் உடன் பிறந்தார்களும் இனி ஆவிகளாகவோ பிற வகையிலோ மறைந்திருக்கத் தேவையில்லை என்று தென்னவன் கண்டான். வெண்ணிலாவுக்கும் முத்தொளிக்கும் இளவேனிலுக்கும் தென்றலுக்கும், இளவேனிலையும் தென்றலையும் வளர்த்த பெற்றோருக்கும் அவன் எல்லா விவரமும் கூறியபின் அவர்களை ஒருங்கு கூட்டினான்.

பொன்முடியின் தலைமையில் ஊராரைக் ஊராரைக் கூட்டித் தென்னவன் குழந்தை ஆவிகளின் உருக்கமிக்க கதை முழுதும் கூறினான்.

“அவர்கள் ஆவிகளல்ல. ஆள் துணையற்று ஆரிடர்பட்ட குழந்தைகளே” என்று கூறி அவர்களையும் அவர்கள் உடன் பிறந்தார்களையும் வளர்த்தவர்களையும் அறிமுகப்படுத்தினான்.

பெற்றோர்கள் அவ்வூரையடுத்த காடுகளிலேயே திரிந்திருந்தனர். தங்கையின் இளவேனிலையும் தென்றலையும் வளர்த்தவர்கள் அவர்களை அடையாளங்கண்டு இட்டு வந்தனர். கப்பலில் தாமும் பிழைத்து வந்தாலும், தங்கள் உயிருக்கும் மற்றப் பிள்ளைகள் உயிருக்கும் அஞ்சியே பிள்ளைகளை நிலவறையில் விட்டுச் சென்றதாகவும் அவர்கள் கூறினார்கள். இளவேனிலை வளர்த்தவர்கள் அவர்களைக் கண்டும் காணாததுமாய் விட்டிருந்தனர்.

தென்னவனும் பொன்முடியும் தாம் பெற்ற தங்கைச் செல்வங்களுக்கு எல்லாச் செல்வமும் அளித்து ஊக்கினர் அவர்கள் வாழ்வில் தம் வாழ்வின் மாவளம் கண்டு மகிழ்ந்தனர்.