பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
232 ||

அப்பாத்துரையம் - 33




லோப்பாக்கா இம் மனமாறுதல் கண்டு வியப்படைந்தான். அவனுக்கும் இப்போது, முன் கீவுக்கு இருந்த ஆர்வம் இல்லை. அதேசமயம் தன் நீண்டநாள் ஆர்வமான படகுவாணிகத்தை அவனால் மறந்து இருக்கவும் முடியவில்லை. ஆகவே, “எனக்கு உன் விருப்பத்துக்கு மாறாக அதை வற்புறுத்தி வாங்க வேண்டுமென்றில்லை. ஆனால், வாங்குவதாக உன்னிடம் கூறியிருந்தேன். வாங்க நான் தயங்கவில்லை. எனக்கு வேண்டிய ஒரு படகும் செலவுக்குச் சிறிது பணமும் பெற்றபின், நானும் அதை விரைவில் விற்றுவிடவே எண்ணுகிறேன்.” என்றான்.

கீவ் புட்டியை எடுத்துக் கொடுத்தான். லோப்பாக்கா கூடியமட்டும் உயர்ந்த தொகைகொடுத்துவிட்டு, புட்டியைப் பெற்றுக்கொண்டு கிளம்பினான். அவன் இருக்க விரும்பவும் இல்லை. கீவ் அவனை இரவு தங்கும்படி கூறவுமில்லை. ஆனால், மழையாயிருந்ததை எண்ணி ஒரு குடையும் புற உடுப்பும் தந்து அவனை விரைந்து அனுப்பி வைத்தான்.

புட்டியையும் அதில் இருந்துகொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பொல்லாத புட்டிச்சாத்தனையும் விட்டொழித்ததனால் கீவ் மகிழ்ச்சியே அடைந்தான். மறுநாளே அவன் தன் ஏழ்மைப் போர்வையைப் போர்த்திக்கொண்டு தன் பழைய சுற்றுப் பயணத்தை மீண்டும் தொடங்கினான்.

கலைமாளிகையின் புகழும் அதற்குரியவனான கீவின் புகழும் பெருமா கடலுலகெங்கும் அதற்கப்பாலும் பரந்திருந்தன. கீவ் சென்ற இடமெங்கும் அதற்கப்பாலும் அவை அவன் காதுகளிலேயே ஓதப்பட்டன. ஆனால், அவற்றுக்கும் அவனுக்கும் தொடர்பு உண்டு என்பதை எவரும் அறியவில்லை.

பல இடங்களுக்கும் சென்று திரும்பும் வழியில் அவன் ஹவாயிலே உள்ள ஹோனுனு என்ற சிறு நகரில் தங்கினான். அது அவனுக்குப் பழக்கமான இடமானதால் அவன் எல்லாரையும் அறிந்தான். ஆயினும் அவன் மாற்றுருவில் யாரும் அவனை அறியவில்லை. இந்நிலையில் மாலை நேரத்தில் ஒரு பெண் குளித்துக்கொண்டிருப்பது கண்டு, அது யாரென்றறிய அத்திசையில் சென்றான். அவள் குளித்துப் புத்தாடையுடன்