பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 237

அவன் இப்போது எண்ணினான். அந்த ஒரு சிறு புள்ளி, அவன் வாழ்க்கைத் தத்துவம் அத்தனையையும் மாற்றியமைத்தது.

கோக்குவாமீது அவன் வைத்திருந்த பற்றுப் பெரிது. அவளுக்காக அவன் உயிரும் தரத் தயங்கவில்லை. அவன் காதல் தன்னலக் காதலாய் அமைந்திருந்ததால், இப்போதும் அவன் கோக்குவாவை மணக்கத் தடையில்லை. அந்தப் புள்ளி இன்னும் பலநாள் வெளியாருக்குத் தெரியவராது. ஆனால், அவன் தன் காதலுக்காக ஓர் உயிரின் - தன் உயிருக்குயிரான ஒரு காதலியின் வாழ்வைப் பலியிட விரும்பவில்லை. முன்பு செல்வத்தை வெறுத்தது போலக் காதலையும் துறந்து நடைப்பிணமாகத் திரிவது அல்லது உயிரை எந்த நல்ல காரியத்திலாவது ஈடுபடுத்திப் பலியிடுவது என்று அவன் துணிந்தான்.

இதுமுதல் அவன் தலை, எண்ணெயை மறந்தது; உடல், புத்தாடைகளையும் நறுமணப் பொருள்களையும் மறந்தது; அவன் கலைமாளிகையையே கண்ணெடுத்துப் பாராமல், பகலையும் பட்டணத்தின் தெருக்களையும் நாடாமல், காடு கரைகளில் கரந்து திரிந்தான்.

திடுமென ஒருநாள் அவனுக்குப் புட்டிச்சாத்தனின் நினைவு வந்தது. இப்போதுமட்டும் அந்தப் புட்டி கைவசமிருந்தால், ஒரே ஒரு தடவை அதன் உதவி நாடி, என் காதலுக்கு இருக்கும் ஒரே தடையைப் போக்கிக் கொண்டு, அதை மீண்டும் விற்றுவிடலாமே! ஏன்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று.

பணத்துக்காக விரும்பாத புட்டிச்சாத்தனை, அவன் காதலுக்காக மீண்டும் ஒருமுறை விரும்பினான்.

அவன் உள்ளத்தில் மீண்டும் நம்பிக்கை ஒளி ஏற்பட்டது. உடலில் மீண்டும் தெம்பு ஏறிற்று. திருமண நாளைச் சற்று ஒத்தி வைத்திருப்பதாக ஹோனானாவில் கியானோவுக்குக் கடிதம் எழுதிவிட்டு, அவன் புறப்பட்டான். புட்டியோடு மழையில் அனுப்பிவைத்த நண்பன் லோப்பாக்காவை நாடி அவன் கால்கள் விரைந்தன.

ஓடும் வண்டிகளில் அவனுக்கு இருக்கப் பிடிக்கவில்லை. வண்டியைத் தாண்டி ஓட நினைத்தான். நீர் கிழித்துச் செல்லும்