பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
238 ||

அப்பாத்துரையம் - 33



படகில் அவன் இருக்கை கொள்ளவில்லை. சிறகிருந்தால் பறக்க உதவுமே என்று எண்ணினான்.

‘இருந்தவன் எழுந்திருக்குமுன் நடந்தவன் காதவழி’ என்று ஒரு பழமொழி உண்டு, அவனிடம் பலநாள் தூங்கிக் கிடந்த புட்டிச்சாத்தன் அவன் கையிலிருந்து சென்றதே. அவனிடமிருந்து நெடுந்தொலை பறந்தோடிவிட்டது என்பதை அவன் கண்டான்!

லோப்பாக்காவை அவனால் காணமுடியவில்லை. அவன் பெருஞ்செல்வமடைந்து தொலைநாடுகளில் வணிக மன்னனாக வாழ்வதாகக் கேள்விப்பட்டான். அவன் நண்பர் சிலரைப்பற்றி உசாவினான். அவர்களும் திடீரெனப் பெருவாழ்வு கண்டு பெருவாழ்வு கண்டு பெருமாக் கடலின் பல எல்லைகளில் மாளிகைகள் கட்டி வாழ்வதாகக் கேள்வியுற்றான். ‘அந்தோ! நான் அருமையறியாது வாளாவைத்திருந்த புட்டி, சென்ற வழியெல்லாம் செல்வக் குவை தூவிய வண்ணம் நெடுந்தொலை சென்றிருக்கிறது! இப்போது அதன் விலை என்னா வாயிருக்குமோ?’ என்று கவலை அவன் உள்ளத்தில் எழுந்தது.

'புட்டியை வாங்குவதில் திறமை இல்லை; பயன்படுத்துவதிலும் விற்பதிலுந்தான் திறமை இருக்கிறது' என்பதை அவன் கண்டான். செல்வமும் மகிழ்ச்சியும் தாண்டவமாடிய இடங்களிலெல்லாம் அதை விற்று விட்ட திறனைத்தான் அவன் கண்டான். செல்வத்துடன் துயரம் குடிகொண்ட இடந்தான் அது தங்கி இருக்கும் இடமாயிருக்க வேண்டுமென்ற குறியிலக்குடன் அவன் ஓயாது தேடினான்.

முத்தும் துறைமுகத்தை அடுத்த ஒரு பேட்டையில் ஒரு வெள்ளை இளைஞன் வீட்டில் கீவ் தான் நாடிய குறியிலக்கை அடைந்தான். அங்கே செல்வத்தின் தடம் இருந்தது. ஆனால், சிந்தனையும் சீர்கேடும் அதில் படர்ந்திருந்தன.

அவன் தேடிச்செல்லுமுன் வெள்ளை இளைஞன் அவனை நாடி எதிர்வந்தான். கீவ் கைநடுங்க வாய் குளற அவனைப் பற்றிக் கொண்டு, ‘புட்டிக்காக, புட்டிக்காகவே நான் வந்தேன்,’ என்றான்.

வெள்ளை இளைஞன் நல்லவன், இரக்க உள்ளம் படைத்தவன். அவன் கீவைக் கட்டிக்கொண்டு கோவென்று அழுதான். கீவுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘புட்டியை விற்க