பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 239

மனமில்லையா? அல்லது புட்டி வேறிடம் சென்றுவிட்டதா? ஏன் அழுகிறாய்? அதை உன்னிடமிருந்து வாங்கத்தானே வந்திருக்கிறேன். உனக்கு இன்னும் ஏதேனும் வேண்டுமானாலும், புட்டியிடமிருந்து பெற்றுக்கொள். நான் அதை வாங்கிக் கொள்ளவே வந்திருப்பதால், நீ தயங்க வேண்டாம்’ என்றான்.

இளைஞன், “அந்தோ! நான் அதற்காகவெல்லாம் அழவில்லை, புட்டி என்னிடம்தான் இருக்கிறது. அதை நான் விற்கவும் தயங்கவில்லை. ஆனால், நான் தொழிலாளி, என் முதலாளியிடமிருந்து திருடிய காசுகொண்டு அதை வாங்கினேன். வாங்கியதிலும் எனக்குப் பழி; அதை எளிதில் யாரும் திரும்ப வாங்கமுடியாத விலைக்கும் வாங்கிவிட்டேன். அது என்னிடம் இருந்தாலும் எனக்குப் பழி; ஆனால், இப்போது நீ அதை வாங்க வந்திருக்கிறாய். என்போல் நீயும் இளைஞன்தான். ஆனால்,நீதான் கடைசி ஆளாகவேண்டும். என் பழிசார்ந்த வாழ்விலிருந்து தப்ப, உன் வாழ்வையே நான் பாழாக்க வேண்டும். இத்தகைய இருதலைப் பழியில் வந்து சிக்கி விட்டேனே என்று தானே வருந்துகிறேன்.” என்றான்.

கீவினால் அந்த நேரத்திலும் ஒரு சிரிப்புச் சிரிக்க முடிந்தது. அது பேய்ச் சிரிப்புத்தான். ஆனால், அதிலும் ஒரு கனிவு இருந்தது. காதலுக்காக அவன் பழி ஏற்கவும் தயங்கவில்லை. இந்த இளைஞன் தனக்காக அழாமல் இன்னொருவனுக்காக அழுவதைக்காண அவன் மீது ஏற்பட்ட பாசமும் அவன் கவலைகண்டு இரங்கும் இரக்கமும் அந்த நகைப்பில் கலந்திருந்தன.

“காசு!,” நீதான் கடைசி ஆள்!” இவற்றின் பொருள் என்னவாயிருக்கக்கூடும்?" என்று சிந்தித்தான். 'நீ வாங்கிய விலைதான் என்ன?' என்று கீவ் கேட்டான்.

ஆனால், இளைஞன் குரல் ஈயின் குரலினும் தாழ்வுற்றது. ‘இரண்டு காசுகள்’ என்றான்.

கீவுக்கு இப்போது தன் கோரநிலை புரிந்தது. இரண்டு காசுக்கும் குறைத்துத்தான் வாங்கவேண்டும். அதற்குக் குறைந்த விலை ஒன்றே ஒன்றுதான்-ஒரு காசு! அதன்பின் அதை யாரும் வாங்க முடியாது! அதனுடன் தான் தன் வாழ்வை ஒப்படைத்து-