பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 247


கிழவன், “மகளே! இதில் நான் என்ன செய்ய முடியுமோ, செய்கிறேன். நான் நெடுநாள் இருக்கப் போவதில்லை. என்னை அதை வாங்கச் சொல்கிறாயா” என்றான்.

“அவ்வளவு கொடிய காரியத்தை நான் யாரையும் செய்யச் சொல்ல மாட்டேன். அதிலும் உம்மைப் போன்றவர்களுக்கு உதவ வேண்டியதைவிட்டு, இந்த மாதிரி வகைப் பழிகளில் தள்ளுவதா? நான் கேட்பதெல்லாம் அந்தப் புட்டியை என் கணவனிடமிருந்து நாலு சிறு காசு கொடுத்து வாங்கித் திரும்ப என்னிடம் முன்று காசுக்கு விற்று விடுவதுதான். வாங்குபவள் நான் என்று தெரிந்தால், என் கணவர் விற்கமாட்டார். எனக்கோ நான் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை. என் கணவனை மகிழ்வித்துப் பார்க்க மட்டுமே விருப்பம்.” என்றாள் அவள்.

கிழவன் அவளைக் கைகூப்பி, “அம்மணி, நீ ஒரு பெண் தெய்வம். இதோ நீ கோரியபடி செய்கிறேன்.” என்றெழுந்தான்.

கோக்குவா நாலு சிறு காசை அவனிடம் கொடுத்து, “இந்த இடத்திலேயே நான் இருப்பேன். விரைவில் வாருங்கள்,” என்றாள்.

அவள் திட்டமிட்டதுபோலக் காரியம் முடிந்தது. கிழவன் புட்டியுடன் வந்தான். கோக்குவா மூன்று சிறு காசுகள் தந்து புட்டியைப் பெற்றுக் கொண்டாள். அவளிடம் புட்டியை விற்க மனமில்லாமல் கிழவன் தழுதழத்தான். ஆனால், கோக்குவாவின் வீர உள்ளம் கிழவனைப் பழி கொள்ள ஒருப்படவில்லை. புட்டியுடன் அவள் சென்றபின் கிழவன் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றான்.

இப்போது துன்பத்தின் முறை கோக்குவாவுக்கும் இன்பத்தின் முறை கீவுக்குமாக, அவர்கள் தொடக்கக் கால உறவு தலைமாறிற்று. புட்டியைத் தொலைத்துவிட்டோமென்ற மகிழ்ச்சியில் கீவ் உறங்கினான். அது உண்மையில் தன்னிடமிருந்து தன் மனைவியிடமே சென்றிருக்கிறது என்பதை அவன் கனவிலும் கருதவில்லை. ஆனால், அவன் உறங்கும் வேளையிலெல்லாம் கோக்குவா விழித்திருந்து தன் எதிர்காலம் பற்றிக் கவலைப்பட்டு அரற்றிக் கொண்டிருப்பாள். ஆனால், அத்துன் பத்தினிடையேயும் அவளுக்கு ஒரு ஆறுதல் இருந்தது. கணவன் காதலுக்கும் அவன்