பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

83

இந்தப் பண்பைத் தேடியே இவ்வளவு தொலை காடும் மேடும் ஊர்களும் சுற்றி அலைந்தேன்' என்றான்.

'அப்படியானால் நீங்கள் தேடிவந்த பெண் நம் ஆராய்ச்சி தான்' என்றாள் பெண்ணின் தாய் மூதறிவணங்கு.

‘ஊரின் பெயரே முன்மதி. அதில் முந்தியமதி ஆராய்ச்சிக் குத்தான். குடும்பத்தில் பாட்டி முப்பாட்டி காலமாக வந்த பெயர் அது என்பது உண்மை. ஆனால், ஆராய்ச்சிக்கு அது முழு அளவில் பொருத்தமான பெயர். முன்மதி ஊரில் வந்த, முன்னாராய்ச்சியறிவு அவள் அறிவு' என்றான் தந்தை முன்னறி பெருமாள்.

ஏற்றது.

அவன் பாராட்டை ஊர் முற்றிலும் ஆரவாரத்துடன்

பெண்ணின் அத்தையாக வந்திருந்த ஒரு மூதாட்டி, தன் மருமகள் அறிவை நேரிலேயே அயலூர் மாப்பிள்ளைக்குக் காட்ட விரும்பினாள். இதைக் கண்சாடையாய்ப் பெண்ணுக்கு அறிவித்தபடி, 'ஆராய்ச்சி! உன் மாப்பிள்ளை சிற்றுண்டி அருந்த வேண்டுமே, பரணில் போய்ச் சிற்றுண்டிப் பேழையிலிருந்த நல்ல தீனிகளாகப் பொறுக்கிக் கொண்டுவா' என்றாள்.

ஆராய்ச்சி பரணேறிச் சென்றாள்.

எல்லாரும் வெளியே கூடியிருந்ததனால் வீட்டினுள் ஆள் இல்லை. பரணில் பேழையைத் திறந்து, சிற்றுண்டிகளைப் பொறுக்கிக் கொண்டே, அவள் தன் கண்களைச் சுழலவிட்டாள். ஒரு விட்டம் இற்றுவிழும் நிலையில் இருப்பதாக அவளுக்குத் தோன்றிற்று. அவள் முன்னறிவு வேலைசெய்யத் தொடங்கிற்று.

'இஃது இன்று விழாது.பலநாள் விழாது. ஆனால், ஒரு நாள் விழும். அந்த நாளைக்குள்.'

பின்மதியின் மனைவியாய்த் தான் வாழும் நாள்களை அவள் சிந்தனை அவள் மனக்கண்முன் படைத்துக் காட்டிற்று.

'பின்மதிக்கு ஒரு பிள்ளை பிறப்பான். அவனுக்கு என் முன்மதியும் தந்தையின் பின்மதியும் ஒருங்கே அமைந்திருக்கும் அவன், இருவருக்கும் - இது குடிக்கும் - இரண்டு ஊர்களுக்குமே