92
II.
அப்பாத்துரையம் - 34
எடுத்து வைத்துக் கொள்ள மறந்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்!' என்று அவள் மன்றாடினாள்.
'பாவம்! மன்னிக்க வேண்டிய செய்தி இந்த ஒன்றுதான் போலிருக்கிறது! இந்த முழு மூடத்தை வைத்துக் கொண்டு தாய்தந்தையர்கள் வ்வளவு காலம் எப்படித்தான் வாழ்ந்தார்களோ?' என்று நார்மடி நினைத்துக் கொண்டான். ஆனால், இப்போதும் அவன் எதுவும் சொல்லவில்லை. சொல்லிப் பயனில்லை என்று விட்டு விட்டான்.
ன்னும் பசிக்கு எதுவும் வரவில்லை. சிறிது நேரம் அவளாகக் கொண்டு வருவதை எதிர்பார்த்திருந்து விட்டு, பின் அவனாகக் கேட்டான்.
"பசி நேரம், சும்மா இருக்கிறாயே! எங்கே நீ செய்த வடைகள்? எப்படி இருக்கின்றன பார்ப்போம்?" என்றான்.
"ஐயையோ! வடைகள் ஒன்றிரண்டைத் தான் நான் தின்றேன். பகல் சமையலே செய்யாததால் எனக்குப் பசியாக இருந்தது. ஆனால், நான் தின்றதும் அன்றி நம் பூனையும் அடுக்கடுக்காக வடையைத் தூக்கிக் கொண்டு போயிற்று. அதை நான் துரத்திச் சென்றேன். அஃது எட்டாத மதிலேறி இருந்து
கொண்டு என் கண் முன்னாலேயே அவ்வளவையும்
விழுங்கிவிட்டுது!” என்று அவள் கதையளந்தாள்.
பசி, உள்ளார்ந்த கோபம் இவற்றிடையேகூட அவனுக்குச் சிரிப்பு வந்தது.
66
ஏன் ன் சிரிக்கிறீர்கள்? பூனை நான்தான்
நினைக்கிறீர்களா?” என்று கேட்டாள் அவள்.
66
என்று
“என் மனைவி பூனை என்றும் நான் நினைக்கவில்லை; பூனை என் மனைவியென்றும் நினைக்கவில்லை; இரண்டும் வேறு வேறாகத்தான் இருக்க வேண்டும். சரி, நீயும் பூனையும் தின்றது போக மீதி ஒன்றும் இல்லையா?" என்றாள்.
“நான் பூனையைத் துரத்திக் கொண்டு போன சமயமாகப் பார்த்து வடைகள் கருகிவிட்டன. எண்ணெயும் பற்றி எரிந்து போயிற்று!” என்றான்.