பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

93 கோபம்

அவனுக்கு இப்போது உண்மையிலேயே மிகுதியாயிற்று. ஆயினும் அவன், அதை அடக்கிக் கொண்டான்.

'அப்படியானால் நான் வந்த பின்னும் ஏன் சும்மா இருக்கிறாய்? போய் மீந்த எண்ணெயையும் மாவையுமாவது கொண்டு வா, திரும்பவும் நானாவது சுட்டு உனக்கும் தந்து நானும் தின்கிறேன்!' என்றான்.

'எண்ணெயும் மாவும் இருந்திருந்தால், நீங்கள் சுடப் போகும்வரை நான் சும்மாவா இருப்பேன்? மீதி எண்ணெய் அடுப்பிலேயே இருந்ததால் அதுவும் எரிந்து போயிற்று. எரிந்த தீ வீட்டையே பொசுக்கிவிடுமோ வென்று பயந்து, நான் மாவைக் கொட்டி அணைத்தேன். நான்செய்த பிழைகளில் இன்று நீங்களும் பட்டினி, நானும் பட்டினி!' என்றாள்.

அவனால் அவளைக் காதைப் பிடித்துத் திருகாமல் இருக்க முடியவில்லை. "சிறு குழந்தைகளுக்கு இருக்கும் அறிவுகூட உனக்கு இல்லை. உன் தாய் தந்தையர்கள் உன்னுடன் எப்படிக் காலம் கழித்தார்களோ?” என்று மனக்கசப்புடன் கூறினான்.

காது நோவு பொறுக்காமல் அவள் சிறு பிள்ளை போலவே கத்தினாள். சிறு பிள்ளை போலவே அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

"நான் அப்பா அம்மா இல்லாமல் நீங்களே கதி என்று வந்திருக்கிறேன். அடிபட்டு எனக்குத் தெரியாது. நீங்கள் இப்படி அடித்தால் நான் என்ன செய்வேன்!” என்று தேம்பினாள்.

அவன் கோபம் கணத்தில் மாறிவிட்டது. இரக்கமே மேலிட்டது. அவளைச் சொல்லிக் குற்றமில்லை. தாய் தந்தையர் அவளுக்குச் சரியான பயிற்சி அளிக்கவில்லையென்று அவன் கருதிக் கொண்டான். அவள் அழுகை தீர அவளை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு, குழந்தையைச் சிரிப்புக் கூட்டுவது போலப் பேசினான். அவளும் குழந்தைப் போல எல்லாவற்றையும் மறந்து அவனிடம் கனிவாகப் பேசினாள்.

வெளியே கோபத்தை விட்டுவிட்டாலும், நார்மடிக்கு உள்ளே கவலை மிகுதியாயிற்று.

வேலைக்குப் போகாமலும் இருக்க முடியாது. இவளை நம்பி வீட்டை விட்டுப் போன ஒரு நாளில் இவ்வளவு வீட்டுப்