பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அப்பாத்துரையம் - 34

அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்வாள். 'ஐயோ! இப்படிப்பட்ட மட்டி மனைவியைக் கட்டிக்கொண்டு நீங்கள் எவ்வளவு கட்ட நட்டங்களுக்கு ஆளாகிவிட்டீர்கள்! என்று கண்ணீர் வடிப்பாள்.

முதலில் அவள் அழகுக்காகவே அவளைத் தெரியாமல் மணந்தவன் நார்மடி; அவள் மட்டி என்று தெரிந்தபின் படிப்படியாகஅவன் அவளை மணம் செய்த பிழைக்காக வருந்தத் தொடங்கியிருந்தான். ஆனால், இப்போது அவள் கள்ளங்கபட மற்ற அன்புள்ளமும் மனிதப் பாசமும் பணிவும் வாய்மையும் அவனை உருக்கின. 'அவள் மட்டித்தனத்தையும் இனி என்னால் பொறுத்துக்கொள்ள அதனால் ஏற்படும் கட்டநட்டங்கள் எவ்வளவானாலும் அதைப் பொறுத்துக் கொள்ள முடியும்; இந்த அன்புச்செல்வம் அவற்றுக் கெல்லாம் பதின்மடங்கு ஈடுசெய்ய வல்லது என்று அவன் எண்ணினான்.

முடியும்;

அவளிடம் அவன் காட்டிய பரிவும் பாசமும் முன்னிலும்பன் மடங்காயின. அம் மாறுதல் கண்டு அவளும் மகிழ்ந்தாள். இவ்வளவு நல்ல கணவனுக்காகத் தான் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தன் மட்டித் தனத்தை விட்டுவிடவேண்டுமென்றும் அவள் உறுதி செய்து கொண்டாள். அவ்வகையில் தனக்கு உதவும்படி அவள் கடவுளை ஓயாது வேண்டிக் கொண்டாள்.

நல்ல தூக்க நேரத்திலும் அவள் மந்திரமும் அவள் உறுதியும் அவளறியாது செயலாற்றின.

'நான் மட்டி, நான் திருந்த வேண்டும். என் கணவர் எவ்வளவோ நல்லவர். அவருக்காக என் மட்டித்தனத்தை விரைவில் போக்கியருள வேண்டும், கடவுளே!' என்ற சொற்கள் நார்மடியின் அரையுறக்கத்தில் அவன் செவியில் விழும். அச்சமயங்களில் அவன் அவளை அன்பாதரவுடன் நோக்கி மகிழ்வான்.

அவள் மட்டித்தனம் அவ்வளவு பெரிதாகப் போய்விடவு மில்லை. அதன் பயனாக ஏற்பட்ட வறுமையும் அவர்களை வாட்டாமல் விட்டு விடவுமில்லை. ஆனால், நார்மடி இப்போது அவள் திருந்த வேண்டு மென்றுகூடவிரும்ப வில்லை. "மருது! நீ