சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
99
இப்படி ஓயாது கவலைப்பட வேண்டிய தில்லை. உன் மட்டித்தனத்தைக் கண்ட நான் முன்பு வருந்தியதும் கண்டித்ததும் தவறு என்று இப்போது காண்கிறேன். எனக்கு நீ திருந்த வேண்டும் என்ற எண்ணமும் இப்போது இல்லை. அதற்காக நீ கவலைப் படவும் வேண்டாம். இப்போது இருப்பதுபோல் இருந்தால் போதும்!” என்பான்.
மருதாயியும் திருந்த வேண்டும் என்ற எண்ணத்தை நாளடைவில் ஒழித்தாள். ஏனெனில், அவள் எவ்வளவு முயன்றாலும் அவள் மட்டித்தனம் புதுப்புது வகையில் செயலாற்றிக் கொண்டுதான் இருந்தது. நார்மடியும் புதுப்புது ஏமாற்றங்களடைந்து, சில சமயம் சிறு சீற்றங்கொண்டும், சில சமயம் சிரித்தும், சில சமயம் தோல்விகளை மறைத்தும் வந்தான்.
இனி, எப்படியாவது மீண்டும் உழைத்துப் பொருள் திரட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் நார்மடிக்கு எழுந்தது. அருகிலுள்ள நகரத்துக்குச் சென்று தொழிற்சாலைகளில் உழைக்க எண்ணினான். ஆனால், மருதாயி தானும் உடன் வரவேண்டும் என்று பிடிவாதம் செய்தாள்.
ய
புறப்படும்போது அவர்களிடம் சில வறண்ட அப்பங்கள் தாம் இருந்தன. ஆனால், அவற்றுடன் சேர்த்து அண்டைய யாலரிடமிருந்து அவர்கள் மூன்று வெண்ணெயுருண்டைகள் பெற்றுக்கொண்டனர்.வீட்டுப் பொருள்களையெல்லாம் அவன் உள்ளறையில் வைத்து விட்டுக் கதவுகளைப் பூட்டினான்..வெளிக் கதவுகைளையும் பூட்டிக் கொண்டு வரும்படி மனைவியிடம் கூறிவிட்டு, நார்மடி ஊர் எல்லை வரை நடந்தான். ஊரில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தபின் அவன் முன் சென்று காத்திருந்தான்.
ஊர் தாண்டிச் சாலை வழியில் அவர்கள் சென்றனர். இருபுறமும் பச்சிளமரங்கள் தழைத்திருந்தன. வழி இடுக்கமா யிருந்ததால், வண்டிகள் செல்லும்போதும் இளமரப் பட்டைகள் பல உராய்ந்து கிழிந்திருந்தன. நார்மடி அவற்றை மருதாயிக்குச் சுட்டிக்காட்டினான்.“பாவம்! பாதையருகில் இருப்பதால் இந்த இளமரங்கள் எவ்வளவோ தொல்லைப் படுகின்றன!" என்றான்.