சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
105
வைரமாலைகள், பொன் காசுகள், முத்துப் பவளங்கள் ஆகியவற்றை எடுத்து அவர்கள் வகை வகையாக்கிக் கட்டினர். நார்மடி அவற்றை கண்டு வியப்பும் கிலியும் கொண்டு நடுங்கினான்.
மருதாயி பகல் முழுதும் கதவைச் சுமந்து வந்திருந்தாள். இரவில் நன்றாகத் தூங்கவுமில்லை. இப்போது மரத்தின் மேலும் அதை நீண்ட நேரம் தாங்கிக் கொண்டிருக்க அவளால் முடிய வில்லை. அத்துடன் கணவனுக்கு இருந்த கிலி அவளுக்கு இல்லை. அவன் கிலியையும் அவள் உணரவில்லை. வீட்டில் அயலார் அருகிலிருக்கும் சமயம் கணவனுடன் இரகசியமாகப் பேசுவது போல, அவள் அவன் அடித்துடையைக் கிள்ளிக் கொண்டு பேசினாள்.
66
'அத்தான்! என்னால் இத்தகைய சுமையையும் சுமந்து கொண்டிருக்க முடியாது. கொஞ்சம் பளுவைக் குறைக்கப் போகிறேன். முதலில் முந்திரிக் கொத்துப்போகட்டும்!" என்றாள்.
அவன், தம் ஆபத்தைச் சுட்டிக்காட்டி அதைத் தடுத்துப் பார்த்தான். அவள் கேட்கவில்லை. 'சரி, இன்றுடன் இருவரும் ஒழிந்தோம்' என்றே முடிவு செய்து அந்த முடிவை எதிர் நோக்கி இருந்தான்.
கதவின் மேலிருந்து ஒரு பானையை அவள் எடுத்தாள். கவிழ்த்தாள். மரத்தடியில் முந்திரிக்கொத்துகள் விழுந்து உருண்டன.
முதலில் திருடர் திடுக்கிட்டு எழுந்து சிறிது தொலை விலகினர். ஆனால், ஒருவன் சிரித்தான். "இவை அணில்கள் சேகரித்த கொட்டைகள் தாமடா! இதற்குப் பயமா?" என்றான்.
ஒரு திருடன் சிறிது வாய் பிளந்து கொண்டு அரைத் தூக்கத்தில் உட்கார்ந்திருந்தான். முந்திரிக் கொத்து உருண்டை களில் ஒன்று சரியாக அவன் வாயில் மேல் விழுந்தது. விழுந்ததும் இனிக்கவே அவன் அதைக் கடித்துத் தின்றான்.
"அடே கொட்டையல்லடா! இந்த மரம் முந்திரிக் கொத்து மரமடா! விழுந்ததெல்லாம் முந்திரிக் கொத்துகள். பொறுக்குங்கள், பொறுக்கித் தின்னுங்கள்!” என்றான்.