112 ||
அப்பாத்துரையம் - 34
தன்மனம் போலே தன்கோலம்!
தைதை தைதை தையக தை தந்தக தந்தக தந்தக தை!’
என்று அவள் பாடியாடினாள்.
கலைச் சித்துகளில் அரிசில்கிழான் வல்லவனென்றால், குறும்புச் சித்துகளில் குலாமலர் அவனிலும் வல்லவளாகவே இருந்தாள். மாமன் கனவு காணாத புதுப்புது வகைகளிலெல்லாம் அவள் பெருமை சிறுமைச் சித்துகளைப் பயன்படுத்தினாள்.
அவள் சந்தையிலிருந்து கீரைத் தண்டு வாங்கி வருவாள். வழியில் கீரைத்தண்டு கீரை மரமாகிவிடும். தூக்கிவரும் பெருஞ்சுமை கண்டு தாய் 'இஃது என்ன?' என்று திகைப்பாள். அடுத்தகணம் கீரைமரம் பழையபடி கீரைத் தண்டாகிவிடும்!
"இந்தக் கழற்சியை நான் கீழே வைக்கிறேன். நீ தூக்கி விடுவாயா?” என்று அவள் விளையாட்டுத் தோழர்களைக் கேட்பாள். அவர்கள் இணக்கம் தெரிவித்தபின், அவள் சுழற்சிக்காயை ஒரு பெரிய பாராங்கல் ஆக்கி விடுவாள்! அதன்மீதே அவளும் உட்கார்ந்து கொண்டு சிரிப்பாள்!
ஒரு சிறிய எறும்பை ஒரு மூலைக்குள் துரத்தி நெருக்கிற்று ஒரு சிலந்தி. குலமலருக்கு உடனே தன் வாய்பாடு நினைவுக்கு வந்துவிட்டது. அவள் எறும்பைப் பெரிதாக்கினாள். துரத்திக் கொண்டு வந்த சிலந்தி அஞ்சி ஓடத் தொடங்கிற்று. ஆனால், அதைப் பக்கத்திலிருந்து பிடிக்க ஒரு பல்லி தாவிற்று. குலாமலர் சிலந்தியைப் பெரிதாக்கினாள். பல்லி அஞ்சி ஓடிற்று!
ஒருநாள் குலாமலர் ஒரு சுண்டெலியைப் பிடித்து விட்டாள். ஆனைக்கை அதை ஆவலுடன் கெளவ ஓடி வந்தது. ஆனால், அதற்குள் அவள் அதைப் பெரிதாக்கிவிட்டாள். சுண்டெலியைப் பிடித்த பிடியை அவள் பின்னும் விடவில்லை. அதை மேலும் பெரிதாக்கி, அதன் முதுகின் மீதே ஏறி அமர்ந்தாள். பெரிதாய் விட்ட சுண்டெலி அவளைத் தூக்கிக் கொண்டு சுற்றி ஓடிற்று.
வழக்கமான சந்து பொந்துகளில் அதன் உடல் புகவில்லை யாதலால் அது வழி தெரியாமல் திகைத்தது. ஆனால், வழக்கமாக