(116)
||–
அப்பாத்துரையம் - 34
குறும்புகளை விட்டுவிடுகிறேன்!" என்று கூறிக் குலாமலர் தோட்ட வீட்டுக்கு ஓடினாள்.
அவள் வாய்பாட்டைக் கூறத் தொடங்கினாள். முதலில்
வளர்ச்சி நிற்கும் வாய்ப்பாட்டை உரக்கக் கூவினாள்.
"தன்மனம் போல... தன் மனம் போல.... தன் மனம்போல..."
இறுதிச் சொல் அவள் நாவுக்கு வரவில்லை. தொண்டைக் குள்ளிருப்பதுபோலத் தோன்றிற்று. தொண்டையை நெரித்து நெரித்துப் பார்த்தாள். அது நெஞ்சுக்குள் மறதி என்னும் ஆழ்மனத் துக்குள் செறிந்து விட்டதாகத் தோன்றிற்று!
வாய்பாட்டின் உயிர்நிலையான சொல் ஒரு தின்பண்டம் என்பதும், அதன் கடைசிச் சொல் மூன்றடியிலும் வந்ததென்றும் அவளுக்கு நினைவிருந்தது. ஒவ்வொரு பலகாரமாக எண்ணிப் பார்த்தாள்.
“மன்மனம் போலே தேங்குழல் என்மனம் போலே உன்குழல் தன்மனம் போலே...."
இது
சரியில்லை என்று கண்டாள்.
இடியாப்பம்,ஆமைவடை,பொரிவிளங்காய்,எள்ளுருண்டை
என எல்லாப் பணியாரங்களையும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாள். அவள் மறதி பற்றி அவளுக்கே எல்லை யில்லாக் கோபம் வந்தது.
தேம்பாவணி அருகில் வந்து அவளைக் குட்டினாள்.
66
"என்ன இன்னும் விழிக்கிறாய்! வாய்ப்பாட்டை மறந்து விட்டாயா, என்ன?" என்றாள்.
அவள் தேம்பித் தேம்பி அழுதாள். “ஆம் அம்மா! நான் என்ன செய்வேன்! இந்தப் பாழும் மறதியால் இன்று என் அருமை ஆனைக்கையின் வாழ்வுக்கே உலை வைத்து விட்டேனே! அரிசில் மாமாவும் இல்லையே! இனி என்ன செய்வேன்?" என்று விம்மினாள்.