பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118)

அப்பாத்துரையம் - 34

பூனை விரைந்து சிறிதாகிக் கொண்டு வந்ததால் இந்தத் தடவை அவள் கூவுமுன் அது அவள்முன் பழைய உருவில் வந்து வால்குழைத்தது.

அவள் புதிய ஆர்வத்துடன் அதை எடுத்தணைத்துக் கொண்டு ஆடினாள்.

“சற்று முன் உன்னைக் கண்டால், புலிகூடப் பயந்திருக்கும், ஆனால் நீ பயந்தாயா?" என்று கேட்டாள்.

கிண்கிணி இவ்வளவுக்கும் தூங்கிக் கொண்டிருந்தான். இரவில் நடந்த இராமாயணம் ஒன்றும் அவனுக்குத் தெரியாது.

அரிசில்கிழான் இரண்டொரு நாட்களிலேயே திரும்பி வந்துவிட்டான். தேம்பாவணி அவனுக்குக் கொடுத்த உதையால் அவன், “இந்தச் சித்துக்களை எல்லாம் விட்டுவிடுகிறேன் அக்கா, இன்றே விட்டுவிடுகிறேன்” என்றான்.

அரிசில்கிழான் சித்துக்களை வேடிக்கைக்குப் பயன்படுத்து வதை அறவே விட்டுவிட்டான். ஆனால், அதைப் பயன்தரும் வகையில் பயிர் வளர்க்கவும், பண்ணை வளர்க்கவும் மட்டும் அவன் பயன்படுத்தினான்.