சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
123
ஆனால், வெறுந்தறியில் நூல்கள் இருப்பதாகப் பாவித்து ஓயாது வேலை செய்தனர். பஞ்சையும் பட்டையும் இழைப்பதாகவும், பொன்னை உருக்குவதாகவும், மணிகளை இழைப்பதாகவும் சேகண்டி ஓயாது பாவித்து நடித்தான்.
அமைச்சர் ஒவ்வொருவராக வேலையை மேற்பார்வையிட வந்தனர். நண்பர்கள் அவர்களை ஆர்வமாக வரவேற்றனர். பஞ்சு மட்டும் இல்லாமலே இழைக்கும் இடங்களைக் காட்டினர். "பாருங்கள் இழைகள் எவ்வளவு நேர்த்தியாய் உள்ளன!” என்று கூறினார்கள். அது போலவே வெற்றுத் தறியை ஓட்டி க் கொண்டே 'நூல்கள் ஓடுவது கண்டீர்களா? எவ்வளவு நேர்த்தியான ஆடையாகி வருகிறது, தெரிகிறதா?' என்று கேட்டார்கள்.
முதலில் வந்த அமைச்சர் பஞ்சு, இழை ஒன்றும் காணாமல் விழித்தார். ஆனால், ஒன்றும் காணவில்லை என்று அவர் சொல்லத் துணியவில்லை. நண்பர்களின் ஆர்வமே அவர்களை வெட்கமடையச் செய்தது. 'இங்கே என் கண்முன் ஒன்றையும் காணவில்லை. ஆனால், இதை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது. காட்டினால், நான் உண்மையற்றவன், என் வேலைக்குத் தகுதியற்றவன் என்று எல்லாரும் முடிவு செய்ய நேரிடும். நமக்கென்ன வந்தது? இந்த மாய இழைகளின் தொல்லையி லிருந்து நாம் தப்ப வேண்டுமானால், காணாததைக் கண்டதாகவே பாவித்துவிட வேண்டும், அவ்வாறே நடித்துவிட வேண்டும் என்று அவன் தனக்குள்ளாக முடிவு செய்தான்.
“ஆகா! இழைகள் என்ன எழில் வாய்ந்தவை? நெசவின் தரம்தான் எவ்வளவு உயர்ந்தது? உங்களைப் பெற்றநாடே நாடு! நீங்கள் வந்திருப்பதால் எம் நாடும் எம் பேரரசரும் புண்ணியம் எய்தினோம்.நாங்களும் மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்ந்தோம்” என்று அவன் காணாதது கண்டு மெச்சத் தொடங்கினான்.
'நண்பர்கள் விரும்பி எதிர்பார்த்தது இதுவே. “தங்கள் கலைச்சுவைத் திறம் நாங்கள் அறியாததன்று; முதன் முதலிலேயே உங்கள் நன்மதிப்பும் பாராட்டும் பெற்றதற்கு மகிழ்கிறோம்; தங்கள் கருத்தை மற்ற அமைச்சருக்கும் பேரரசருக்கும் தெரிவித்து எங்களைப் பெருமைப்படுத்த வேண்டுகிறோம்" என்று பணிவுடன் வேண்டினர்.