சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
127
பதவிக்குத் தகுதியற்றது. மற்ற எல்லாரும் உண்மையும் தகுதியும் உடையவர்கள். பேரரசே!" என்றது அது.
பேரரசன் வெட்கத்தால் உட்கினான். அவனுடைய ஆடை ப் பித்தம் அத்துடன் ஒழிந்துவிட்டது! அவன் பேரரசர் நிலைக்கேற்ற ஆடைகளுடனே அமைவுறலானான்.
பேரரசனைத் திருத்திய தூதுக் குழுவினரை எல்லாரும் வாழ்த்தினார்கள். ஆனால், குழுவில் அவர்கள் முன் சேகண்டி ஒருவனே இருந்ததால், அவனை எல்லாரும் போற்றினார்கள். அமைச்சர்கள் தனித்தனியே அவனைப் பாராட்டிப் பரிசில்கள் வழங்கினர். பேரரசர்கூடத் தம் திருத்தத்துக்குக் காரணமான அவனை வரவழைத்துப் பெரும் பரிசில்கள் வழங்கினார். அவன் மூலமாகவே தமிழகப் பேரரசர்க்கு மீண்டும் ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினார். புதிய பரிசில்களும் பல அனுப்பப்பட்டன.
தமிழகப் பேரரசனுக்கு அனுப்பப்பட்ட பரிசில்களில் ஒன்று, “மேலாடையில்லையே!” என்று நோக்கிய குழந்தையின் உயிர்ச்சிலையாய் அமைந்தது.