பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9. விந்தை மருத்துவன்

முக்கலிங்க நாட்டில் சொக்கலிங்கன் என்றொரு நாடோடி மருத்துவன் இருந்தான். அவனுக்கு எழுத்தறிவு கிடையாது. மருந்துபற்றிய அறிவுகூட அவனுக்குக் குறைவே. ஆனாலும் கைதேர்ந்த மருத்துவர்களைவிட அவன் பேரும் புகழும் உடையவனாய் இருந்தான்.

அவன் முன்னோர்கள் காஞ்சி நகரத்தில் புலவர்களாகவும், மருத்துவர்களாகவும் வாழ்ந்தவர்கள். ஆனால், சொக்கலிங்கன் கல்லா இளைஞனாகவே வளர்ந்தான். உற்றார் உறவினருக்கு அவன் கொடுத்த தொல்லைகள் பல. இறுதியில் சில குடும்ப ஏடுகளுடனே அவன் வெளியேறி, மருத்துவ வேடத்துடனே ஊர்ஊராகச் சுற்றினான். சோழர் பெரும்படை கலிங்கப் போருக்குக் கிளம்பிய சமயம், அவன் அப்படையுடனே கலிங்கம் சென்றான். மறுபடியும் தமிழகம் திரும்பாமல் அவன் அங்கேயே தங்கினான்.

தமிழ் வழங்காத அந்த நாட்டில், படிப்பு இல்லாமலே அவன் எளிதில் மதிப்படைய முடிந்தது. அவன் தமிழ் ஏடுகளைக் காட்டினான். அவற்றை வாசிப்பதுபோலப் பாவித்து, வாய்க்குவந்த பாடல்களைப் பாடினான். அத்துடன் அவன் மருத்துவப் பணிக்கென்று யாரிடமும் எதுவும் கோரவில்லை. பசித்த வேளைக்கு ஒரு பிடி உணவு, அயர்ந்த நேரங்களில் ஒரு குவளை நீர்-இவையே அவன் தேவைகள். இவற்றை அவனுக்கு எவரும் எளிதில் அளித்தனர்.

தவிர, வலிந்து அன்புடன் பொருள் அளிப்பவரிடம் அவன் தன் 'பிள்ளைகளுக்குத் தின்பண்டங்கள்' தன் உறவினருக்கு 'உணவு' என்றே அன்புப் பரிசுகள் பெறுவான். இவையும் அவன் பணிக்கு நன்கு உதவின. ஏனெனில், அவன் பிள்ளைகள் ஊர்ப்