10.வழிமனைவாணன்
திருக்குறுங்குடிக்கருகே இரண்டு நெடுஞ்சாலைகள் குறுக்கிடும் ஒரு நாற்சந்தியில் ஒரு வழிமனை இருந்தது. அதன் தலைவன் பெயர் அம்பலவாணன். அவன் பெயருடன் வழிமனையை இணைத்து அவனைப் பலரும் வழிமனை வாணன் என்றே அழைத்தனர்.
உயர்தரச் செல்வ வழிப்போக்கருக்கு வேண்டிய எல்லா வாய்ப்பு நலங்களும் வழிமனையில் அமைக்கப்பட்டிருந்தன. அதன் மதிப்பிலும் வருவாயிலும் வழிமனை வாணன் கண்ணும் கருத்துமாய் இருந்து வந்தான். சிறப்பாகப் பணியில்லா ஏழைகள், பணம் கடன் சொல்லி ஏய்ப்பவர்கள், வம்பர்கள், எத்தர்கள் ஆகியோர் அதனை அணுகாமல் தடுப்பதில் அவன் மிகவும் விழிப்பாயிருந்தான்.
ஒருநாள் ஒய்யாரமான குதிரை வண்டியில் மூவர் அவன் வழிமனையில் வந்திறங்கினார்கள். அவர்களின் நடையுடை தோற்றங்கள் யாவுமே பகட்டாய் இருந்தன. அவர்கள் செல்வமிக்க உயர்குடியினர் என்று வழிமனை வாணன் வழிமனைவாணன் கருதியதனால், வழக்கம் மீறிய ஆர்வத்துடன் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றான். வேலையாட்களை அனுப்பாமல் தானே சென்று அவர்கள் தேவைகளை உடனுக்குடன் கவனித்தான். ஆனால், அவர்கள் நடந்து கொண்ட வகை அவனுக்கு வியப்பூட்டிற்று. எவரிடமும் அவர்கள் மட்டமதிப் பின்றிப் பேசினர்; எவர்மீதும் சீறி விழுந்தனர்; கையோங்கினர்; உயர்குடியினராயினும் வீணர்களாகத் தோற்றியதால், எங்கே அவர்கள் தன்மீது குறை கண்டு பணம் தராமல் போய்விடு வார்களோ' என்று அவன் அஞ்சினான்.
அவர்கள் வீணர்கள் என்று வழிமனைவாணன் கருதியது சரியே. ஆனால், உயர்குடியினர், பெருஞ்செல்வர் என்று அவன்