பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

||–

அப்பாத்துரையம் - 34

ஏன்?

'என்ன புத்தியடா மாடா, உனக்கு! இவனுக்கு ஒப்பிக்க இன்னொருவனிடம் தட்டிப்பறிக்க வேண்டுமா? கணக்கையும் ஒப்பிக்காமல் இவனிடமே தட்டிப் பறித்தால் என்னவாம்! எப்படி என்கருத்துரை? வேண்டாம்!" என்றான்

காடன்.

அவர்கள் மூவரும் மாடம்பி, காடம்பி, வேடம்பி என்ற புனைபெயர் வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தாய் தந்தையர் அவர்களுக்குப் பெயர் வைத்திருந்தார்களோ என்னவோ, அவர்களுக்குத் தெரியாது. ஏனெனில் நெடுங் காலமாக அவர்கள் புதிது புதிதாகப் புனைப் பெயர் வைத்து வைத்து மாற்றியதனால், புத்தம் புதிய பெயர் தவிர மற்ற எதுவும் அவர்களுக்கு நினைவில்லை. காலந்தோறும் இடந்தோறும் புதுப்புதுப் பெயருடன் இருந்ததனால், காவல் துறையினரும் அவர்களை எளிதில் கண்டுகொள்ள முடியவில்லை. பலதடவை அவர்கள் ஏமாற்றுகளுக்கும் காவல்துறையினரே ஆளாயிருந்தனர்.

காடம்பி, மாடம்பி ஆகிய இருவர் கருத்துக்களையும் கேட்டு வேடம்பி ஒன்றும் பேசாமல் அவர்களையே கூர்ந்து நோக்கியிருந்தான். பின் அவன் ஏதோ நினைத்தவன் போல இடி இடி என்று சிரித்தான்.

"அடே! உங்கள் இரண்டு பேருக்கும் பையிலும் காசில்லை; மண்டைகளிலும் மூளை இல்லை. உங்கள் காசெல்லாம் என் பையில்! உங்கள் மூளையெல்லாம் என் மண்டையில்! ஆகவே கணக்கையும் திட்டங்களையும் என்னிடமே விட்டுவிடுங்கள்!” என்றான்.

மற்ற இருவரும் தை அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்வதாயில்லை.

"உனக்குத்தான் மூளையில்லை. என் பணத்தை நீ வைத்திருக்கிறாய், உன் மூளையை நான் வைத்திருக்கிறேன்' என்றான் மாடம்பி.

"நீ சொல்வதிலிருந்தே உனக்கு மூளை கிடையாது என்பது தெரிகிறதேடா, மாடா! பிறக்கும் போதே இவனுக்கு மூளை கிடையாதே! அதை நீ எப்படி எடுத்திருக்க முடியும்?” என்றான் காடம்பி.