பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

66

(139

பையில் காசிருப்பவர்களுக்கும் வயிறு நிறைந்திருப்பவர் களுக்கும் மூளையே இராது என்பது உங்களுக்குத் தெரியாதா? எடுத்துக்காட்டாக, நம் வழிமனைவாணன் இருக்கிறானே..."

இதைக் கேட்டு கொண்டே வந்தான் வழிமனைவாணன். ஆனால், பேச்சின் தொடக்கம் அவனுக்குத் தெரியாததனால், அவன் இந்தப் பேச்சை ஒய்யார வீணரின் கேலி என்று மட்டுமே கருதினான். அந்த ஒய்யாரப் பேச்சில் அவன் மகிழ்ந்தான். அவர்களுக்கு இசையத் தானும் பேசிக் காரியம் சாதிக்க விரும்பி, அவனும் அப்பேச்சில் இழைந்தான்.

66

'ஆம்! என்னை அன்பர் நன்றாக அறிந்திருக்கிறார். பாம்பின் கால் பாம்புக்குத்தான் தெரியும் என்பார்கள். நான் மூளையில்லாதவன் என்பது இவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது!" என்று நாநயம்படப் பேசினான்.

அவன் பேச்சைப் பாராட்டுவதுபோல வேடம்பி அவனை முதுகில் ஓங்கித் தட்டினான். அது நடிப்பில் ஒரு நேசச் செயலேயானாலும், உண்மையில் ஒரு கண நேரம் வழிமனை வாணனைத் திணற வைத்தது. பல நாழிகை நேரம் அவனால் முதுகை அசைக்க முடியவில்லை.

மனைவாழ்வு நண்பர்களுக்குக்கூட வேறு எங்கும் எளிதில் கிட்டாத வாழ்வாயிற்று. அவர்கள் இன்னும் இரண்டு நாள், ன்னும் மூன்று நாள் என்று வாரக் கணக்காக அங்கேயே தங்கினார்கள். "போனாலன்றிப் பணம் கேட்க முடியாதே! இவர்கள் தாமாகப் போவார்களா? நிலையாக என் தலைமீதே தங்கிவிடுவார்களா?” என்று வழிமனைவாணன் மனம் பலவாறு எண்ணிக் குழப்படைந்தது.

ஒருநாள் அவன் துணிந்து வாய்திறந்தான்:

"மனையின் செலவுகளுக்குப் பணமுடையாயிருக்கிறது. பலநாள் பலவாரக் கணக்காகி விட்டது. கொஞ்சம் கணக்குத் தீர்த்துக் கொடுங்கள்” என்று அவன் கேட்டான்.

ஒரு கணம் மூவரும் பேசாதிருந்தனர்.

பின் காடம்பி பேசினான்: “எவ்வளவு வருகிறது கணக்கு?” என்று கேட்டான்.