1. காடம்பி கதை
நம் வழிமனைகளும் அருந்தகங்களும் தேநீரின் சுவையில் கடும் போட்டியிட்டு வருவது உங்களுக்குத் தெரியுமே! சுவையை மிகுதிப் படுத்துவதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை முறையைக்கையாளுகின்றனர்.அதில் ஒரு முறையை வண்டலூரில் ஒரு விடுதியாளன் கையாண்டு வந்தான். தேநீரில் அவன் ஒரு சிறு திவலை மயக்கமருந்தைக் கலந்தான். அஃது உருகித் தேநீரின் சூட்டுடன் கலந்து நரம்புகளில் முறுக்கேறியதும், தேநீர் பருகியவன் புறக்கண்ணால் காணாதவற்றை எல்லாம் அசுக்கண்ணால் கண்டவற்றையே ஒன்றை மற்றொன்றாகப் பிறழக் கண்டான். ஆயினும் இக்காட்சியிடையே அவன் அடைந்த இன்பம் அவனை மீண்டும் மீண்டூம் அதே விடுதியின் தேநீரை நாடி இழுத்துச் சென்றது.
செங்கோடன் நல்ல வசதியான வாழ்க்கை நலங்கள் உடையவன். அந்த வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலுமே அவனுக்குப் பாசம் மிகுதியாய் இருந்தது. நண்பர்களுடன் அவன் மணிக்கணக்காகப் பேசிப் பொழுது போக்குவான். ஒவ்வொரு நண்பருக்கும் அவன் ஒவ்வொரு செல்லப் பெயர் அல்லது கேலிப் பெயர் வைத்திருந்தான். அவர்களும் அந்தப் பெயர்களாலேயே அவன் பாசத்தை ஏற்றனர். “அடே பன்றி!" என்றால் ஒருவன் “ஏன்?” என்பான். “அடா எருமை!" என்றால் ஒருவன் “இதோ?”
என்பான்.
திருமணமானபின் செங்கோடன் பாசத்தின் பெரும் பகுதி அவன் மனைவி மீது பாய்ந்தது. அவளுக்கும் அவன் ஒரு பாசப் பெயர் வைத்திருந்தான் ‘என் அருமைக் குரங்குக் குட்டி’ என்று அவன் அவளை அழைப்பான். 'என் கழைக் கூத்தாடி' என்று அவனுக்கேற்றபடி அவள் அவனைக் கேலி செய்வான். அவர்கள்