(146)
||–
அப்பாத்துரையம் - 34
இருவர் பாசமும் ஒரு குழந்தை மீது படர்ந்தபோது, குழந்தைக்கு எந்த விலங்கின் பெயரிட்டழைப்பது என்று மனைவி கணவனைக் கேட்டாள். அவன் ஒரு நொடி கூடத் தயங்கவில்லை. ‘இதில் தயக்கம் எதற்கு?' அது நம் ஆசைக் கழுதைக் குட்டியாகவே இருக்கட்டும்' என்றான்.
செங்கோடன் மனைவியின் உண்மைப் பெயர் பூமாலை, மகளுக்கு இருவரும் இட்ட பெயர் பொன்னி, ஆனால், பூமாலை குரங்காயமைந்தது போலவே, பொன்னியும் ஆசை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கழுதைக் குட்டியாகவே இயங்கினாள். அவள் பொன்னி எங்கே என்று கேட்டால் கூட அவள் குரல் கொடுக்க மறந்துவிடலாம். கழுதைக் குட்டி என்று அவன் கூறியதுமே அவள் அவன் மடிமீது வந்திருந்து அவன் கன்னத்தைக் கிள்ளத் தவறுவதில்லை.
எப்படியோ செங்கோடனுக்கு வண்டலூர் விடுதியின் பழக்கம் ஏற்பட்டது. அதன் தேநீரை மிகுதியாகக் குடித்த சமயங்களில் அவனுக்குப் பகல் இரவாகவும், இரவு பகலாகவும் தோன்றின. நீர் நிலமாகவும், நிலம் நீராகவும் காட்சியளித்தன. இது மட்டுமன்று; சில சமயம் விலங்குகள் மனிதராகவும் மனிதர்கள் விலங்குகளாகவும் கூட மயங்கின.
ஒரு நாள் வழக்கமீறி மயக்கமருந்து தேநீரில் ஏறியிருந்தது. நேரமும் இரவு பத்துமணியாயிற்று. அவன் திரும்பி வீடு வரும்போது, பாதையருகிலிருந்த சிறு குட்டை அவனுக்கு வீட்டு முற்றமாகக் காட்சியளித்தது. அடுத்த கணம் அவன் அயலே கிடந்து தவழ்ந்தான். குட்டையில் முட்டளவுக்குமேல் தண்ணீரில்லா விட்டாலும், அவன் அதை விட்டு வெளிவர முடியாமல் திண்டாடினான்.
அவன் நிலையறிந்த ஒரு நண்பன் அவனை இழுத்துக் கரைக்குக் கொண்டுவந்தான். தன் மேலாடையாலேயே அவன் உடலின் ஈரம் புலர்த்தினான். பின் வீட்டருகே இட்டுச் சென்று செங்கோடன் மனைவியையே தட்டி எழுப்பி அவளிடம் கணவனை ஒப்படைத்துவிட்டுச் சென்றான்.
பூமாலைக்குத் தூக்கச் சோர்வு முற்றிலும் நீங்கவில்லை. வெளிக்கதவைத் திறந்து அடைத்தபின், அவள் நேரே தன்