பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

147

படுக்கையில் சென்று விழுந்தாள். செங்கோடனுக்கும் தேநீர் மயக்கம் முற்றிலும் அகலவில்லை. அவன் அரை மயக்கத்திலேயே ‘எங்கே என் கழுதைக்குட்டி?” என்று தேடினான்.

படுக்கையிலிருந்தபடியே பூமாலை வாய் முனகிற்று; இங்கே கழுதைக்குட்டி கிடையாது. கன்றுக்குட்டி தான் இருக்கிறது. வேண்டுமானால் தொழுவத்தில் சென்று பாருங்கள்!" என்றாள்.

தொழுவம் அவன் நின்ற இடத்தின் அருகிலேயே இருந்தது. அவன் தட்டித் தடவிக்கொண்டு அங்கே சென்றான். பசு ஒரு புறமாகவும் கன்றுக்குட்டி இன்னொரு புறமாகவும் கட்டப்பட்டிருந்தன. அவன் கண்களுக்கு எப்படியோ பசு அவன் மனைவி பூமாலையாகவும், கன்றுக் குட்டி அவள் குழந்தை பொன்னியாகவும் தெரிந்தன. அவன் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவதாக எண்ணிக் கொண்டு கன்றுக்குட்டியைக் கட்டிப்பிடித்தான். அது திமிறிய போதும் அவன் விடவில்லை. கொஞ்ச நேரத்துக்குப்பின் அதுவும் அவன் பிடிப்புடன் பழகிவிட்டது. அதன் தலை மீது தலை வைத்தபடி அவன் தொழுவத்திலேயே உறங்கினான்.

தன்னை விட்டுவிட்டுக் கன்றுக்குட்டியைக் கட்டிக் கொண்டிருக்கும் தந்தையைக் கண்டு, காலையில் பொன்னி கோவென்று கதறினாள். அதைக் கேட்டு அங்கே கூடியவர்கள் சிரித்தார்கள். 'நம் கழுதைக் குட்டிக்கும் கன்றுக்குட்டிக்கும் வேறுபாடு தெரியாவிட்டால் வேறு என்ன தெரியப் போகிறது இவருக்கு?' என்று பூமாலைகூட ஏளனம் செய்தாள்.

ஊரிலுள்ள குறும்பன் ஒருவன் இந்தத் தறுவாயை இத்துடன் விடவில்லை. கன்றுக்குட்டி பசுங் கன்றுக் குட்டியாத லால், அதனை மூச்சுத் திணறவைத்த பழி செங்கோடனை விடாது. அஃது அவனையும் அவன் குடும்பத்தையும் கட்டாயம் சுற்றும்' என்றான். இப்போது பூமாலையும் பொன்னியைக் கட்டிக்கொண்டு இருவரும் அழலானார்கள். 'இப்படிஇத்தகைய பழி வந்து சேர்ந்ததே!' என்று அங்கலாய்த்தார்கள்.

செங்கோடன் தான் செய்த காரியத்துக்கு மனமார வெட்கமும் வருத்தமும் அடைந்தான். ஆனால் ‘பழி' என்ற புதிய பூச்சாண்டி கேட்டதே அவன் துயரத்துக்கு எல்லையில்லை.