பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

அப்பாத்துரையம் - 34

அவன் குறும்பன் காலைக் கட்டிக் கொண்டு, 'நீங்கள் தான் வழி செய்ய வேண்டும். இந்தப் பழி போக என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன்' என்றான்.

குறும்பன் எளிதில் வழிவிடவில்லை. “இஃது எளிதில் போகக்கூடிய பழியல்லவே! பசுப்பழி பொல்லாதது, அதுவும் இது கன்றுக்குட்டிப் பழி. இந்தக் கன்றைப் போல் ஒரு தங்கச் சிலை செய்து ஒரு குருக்களுக்குத் தானம் செய்ய வேண்டும்” என்றான்.

பூமாலை கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

66

"இவ்வளவு போதுமா ஐயா! நானே பொன் கொடுக்கிறேன். இந்தப் பழியிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்றாள்.

பூமாலை செல்வச் செருக்குக்கு அவ்வளவு போதாது என்று குறும்பன் கருதினான். ஆகவே பழி மாற்ற அவன் மேலும் கட்டுப்பாடுகள் வகுத்தான்.

“உங்களைப் பழி சூழாமல் இருக்க அவ்வளவு செய்தால் போதும். ஆனால், பழி குழந்தையைச் சூழாமல் இருக்க வேண்டு மானால், மூன்று நாள் அவள் தன் அப்பாவிடம் பேசக் கூடாது, அவரைப் பார்க்கக்கூடாது. அவரை நினைக்கக் கூடப் படாது. அதே சமயம் அவள் தந்தை மூன்று நாள் மூன்று நேரமும் நோன்பிருக்க வேண்டும். நோன்பில் ஒரு கால்துண்டு இட்டலியும் ஓர் அப்பமும் மட்டுமே சாப்பிடலாம்” என்றான்.

"அப்பாவிடம் பேசாமல் நான் எப்படி மூன்று நாள் இருக்க முடியும்? என்னால் முடியாது.பழி என் மீது வந்தால் வரட்டும்' என்று சிணுங்கினாள் பொன்னி.

என்னால் எப்படிக் கால்துண்டு ண்டு இட்டலி, ஓர் அப்பத்துடன் மூன்று நாள் இருக்க முடியும்? என்னால் முடியாது. பழி என்னை வந்து சுற்றினால் சுற்றட்டும்' என்று செங்கோடன் சீறினான்.

ஆனால்' பூமாலையின் கலங்கிய கண்கள் இருவர் உறுதி யையும் குலைத்தன. அவள் இருவரையும் நாடித் தாங்கினாள். 'உங்களுக்காக நானும் நோன்பு இருக்கிறேன். இந்தப் பழியைத் தீர்த்துவிடலாம்' என்று கெஞ்சினாள்.

இருவரும் வேண்டா வெறுப்புடன் இணங்கினார்கள்.