சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
149
மறுநாள் முதல் பொன்னி பூசை அறையில் போய் உட்கார்ந்து கொண்டாள். வகைவகையான சிலைகள் படங்கள் அவளைச் சுற்றி வைக்கப்பட்டன. பூமாலை அவள் விளையாட்டுத் தோழர் தோழியர்களை எல்லாம் வரவழைத்து அவர்களுக்கு விளையாடுவதற்கு வேண்டிய எல்லாவற்றையும், தின்பண்டங்களையும் அளித்தனர். அப்பாவை நினையாமல் இருக்கும்படி அவளை வகைவகையான விளையாட்டுகளில் ஈடுபடுத்தியும், கதை சொல்லியும் மூன்று நாள்கழித்துவிடும்படி ஏற்பாடு செய்தாள். ஆனால், எந்தக் கதையிலும் 'அப்பா', 'பிள்ளை' என்ற சொற்களோ, செங்கோடன் என்ற பெயரோ வரக்கூடாது என்று எச்சரித் திருந்தாள். இந்த ஏற்பாடுகளின் தலைவியாக அடுத்த வீட்டிலிருந்த ஓர் அத்தை வரவழைக்கப்பட்டிருந்தாள். தவறுதலாகப் பொன்னியின் வாயில் அப்பா என்ற சொல் வருவதாகவோ அல்லது அவள் அப்பாவை நினைப்பதாகவோ நிழல் வீசினால், உடனே ஓர் அப்பத்தை அவள் வாயில் திணித்து நினைவைத் திணறடிக்க வைக்க வேண்டும் என்றும் திட்டம் செய்யப்பட்டிருந்தது.
செங்கோடன் நோன்புக்குரிய பொறுப்பை மட்டிலும் பூமாலை முழுவதும் தானே ஏற்றாள். இரவெல்லாம் இட்டலி சுடுவதிலும் அப்பம் அப்பம் சுடுவதிலும், அவற்றை வயிற்றில் தள்ளுவதற்காக நோன்புக்குரிய சுக்குத் தேநீர் காய்ச்சுவதிலுமே சென்றது. விடிய ஒரு யாமத்திலேயே அவள் சிறிது கண்ணயர்ந்தாள். அந்த இனிய தூக்கத்திடையே அவள் நாக்கு நோன்புக்குரிய 'ஒரு துண்டு இட்டலி, ஓர் அப்பம்' என்ற தொடர்களை மனனம் செய்து கொண்டிருக்கத் தவறவில்லை. ஆனால், அப்படியோ எழுந்திருக்கும் சமயம் ‘ஒரு துண்டு இட்டலி; ஓர் அப்பம்' என்பது துண்டு இட்டலி முழு அப்பளமாய், பின் அதுவே துண்டு அப்பம் முழு இட்டலி ஆய்விட்டது.
நோன்பு வகுத்த குறும்பனைவிட அதை நிறைவேற்றிய பூமாலையிடமே இயற்கைக் கற்பனைத்திறம் மிகுதியாய் இருந்தது. ஏனெனில், கணவனிடம் அவள் கொண்டிருந்த பாசம் கற்பனையை இயல்பாகத் தூண்டிற்று. துண்டு அப்பம் என்பது துண்டு துண்டான அப்பம் என்றும், முழு இட்டலி என்பது