பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

155

அவன் ஒரு முழுநாள் கழிந்தே எழுந்திருத்தான். அப்போதும் பல நண்பர்கள் கவலையுடன் அவனருகிலேயே இருந்தனர். பாலும் சூடான தேநீரும் வழங்கினர். உண்டாறிய பின் அவன் சுற்றிச் சுற்றிப் பார்த்து விழித்தான். “நான் எங்கே இருக்கிறேன்? நீங்கள் யார்?” என்று கேட்டான்.

வியப்புடன் அனைவரும் அவனிடம் வந்து பேசினர். அவன் சற்று அமைந்து. 'நான் என்னையே மறந்துவிடும் அளவு நீண்ட கண்டிருக்கிறேன். ஆனால், அது கனவென் நம்பமுடியவில்லை. இன்னும் அது முற்றிலும் உண்மையாகவே இருக்கிறது. அந்தக் கலக்கம் தீரவில்லை” என்றான்.

கனவு

று

அவன் அனுபவங்களைக் கூறும்படி நண்பர் அவனைத் தூண்டினர். அவனும் இணங்கினான்.

நேற்று இந்த இடத்தில் நான் சோர்ந்து விழுந்தது. எனக்கும் நினைவிருக்கிறது. ஆனால், விரைவில் நான் இந்த அரசமரத்தைத் தவிர எல்லாம் மறந்துவிட்டேன். என் கண்களுக்கு அரசமரம் பல்லாயிரங் காதம் உயரமுடையதாயிற்று. வேர்களெல்லாம் பெரிய மலைகளாகத் தோன்றின. ஒரு வேர் மலையின் பக்கமாக ஓர் அகன்ற அரச பாட்டையாகச் செல்வது கண்டேன். அதில் பன்னிரண்டு குதிரைகள் பூட்டிய ஓர் ஒய்யார வண்டி என்னை நோக்கி வந்தது; அது என்னைக் கடந்து செல்லுமென்று எண்ணினேன். ஆனால், அது நான் இருக்கும் இடத்திலேயே வந்து நின்றது. அதன் பின் புறமிருந்து நீண்ட கறுப்பு வெள்ளை அங்கி அணிந்த காவலர் இருவர் இறங்கி வந்தனர். எனக்கு அவர்கள் வணக்கம் செய்தனர்.

“அரசமரப் பேருலகில் சிதல்வாணப் பேரரசின் பெருமான் தங்களை அழைத்து வரும்படி ஆணையிட்டிருக்கிறார். தங்களுக்காகவே இந்த வண்டி” என்றனர்.

நான் முதலில் வியப்படைந்தேன். பேரரசனை நான் ஏன் பார்க்க வேண்டுமென்று தயங்கினேன். பின் அன்பழைப்பை மறுப்பது நல்லதன்று என்று இணங்கிச் சென்றேன்.

பாதை நெடுந்தூரம் மலையருகாகவே சென்றது. பின் மலையின் உள்ளும் புறமும் மேலும் கீழுமாக நெளிந்து நெளிந்து ஊர்ந்தது. வில் வைத்த ஒய்யார வண்டியில் இருந்தபடியால்