பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(156) ·|-

அப்பாத்துரையம் - 34

வழியின் நீளம் எனக்குத் தோன்றவில்லை. ஆனால், ஓரிரவு பயணம் செய்தபின் காலை ளவெயிலில் வானளாவிய ஒரு மதிலையும் ஒரு விரிந்தகன்ற கோட்டை வாயிலையும் கண்டேன் அதன்பின் பொன் வண்ண எழுத்துக்களில் 'சிதல்வாணப் பேரரசின் கோட்டை' என்று எழுதப்பட்டிருந்தது.

மதில்கள் பல காதம் நீளமுடையவையாகத் தோற்றின. அதனுள்ளும் புறமும், மக்கள் பரபரவென்று எறும்பு கறையான்கள் ஊர்வதுபோல ஊர்ந்து சென்றனர். ஒருவரை ஒருவர் கண்டு வணக்கம் செய்தபோதுகூட அவர்கள் ஒரு நொடிதான் நின்றனர். அதற்குள் ஆயிரம் திசைகளில் அவர்கள் சுற்றினர்.

புறநகரமும் அகநகரமும் கடந்து அவர்கள் அரண்மனை வாயிலை அடைந்தனர். அவ்வளவு அழகிய வேலைப்பாடமைந்த கட்டத்தை நான் எங்குமே கண்டதில்லை. அதன் கூடம் உட்கூடங்கள், இடைவழிகள், அறை, உள்ளறைகள் ஒரு பெரிய நகரத்தின் நெருக்கமான பகுதிகள்போலப் பார்வைக்கு இனிய குழப்பம் தந்தன. சிவப்பு, கறுப்புப் பட்டுக்களில் பொன் வேலை செய்த மேற்கட்டிகளும், நவமணி இழைத்த முத்துத் தொங்கல்களும் மேலே எங்கும் நிறைந்திருந்தன. தூண்கள் வெல்வெட்டுப் பட்டுக்களாலும், நிலத்திடம் மணிக்கம்பளங் களாலும் முற்றிலும் போர்த்தப்பட்டிருந்தன.

அரசன் கொலுவிருக்கை மண்டபத்தின் அழகொளி கண்கூச வைத்தது. அதில் கோடி வெயில் நிலவெறிக்கும் அரசர் திருமுன் காட்சியைக் காண இயலாமலே, அவர் திருவடிகளில் நான் கொணர்ந்த மலர்களிட்டு, என் சட்டைப் பையிலிருந்த எலுமிச்சம் பழங்களைக் கையுறையாக வைத்து வணங்கினேன்.

அரசர் பெருமான் கையுயர்த்தி வாழ்த்தி அமரும்படி சைகை செய்ய அதை முதலமைச்சர் வாய்மொழியில் மொழி பெயர்த்து ‘அமருக, அறிவுசான்ற விருந்தினரே!' என்றார்.

செல்வமும் பதவியும் எனக்கில்லாவிட்டாலும் எனக்கு அறிவிருக்கிறது என்ற ஓர் ஆறுதல் அப்போது எனக்கு ஏற்பட்டது.