158
அப்பாத்துரையம் - 34
கிளிப்பிள்ளைப் பேச்சாயிற்று. அவள் சிந்தனையன்றி என் சிந்தனை என்று தனியாக எதுவுமில்லை. நான் அவள் வாசித்த வீணையானேன்; அவள் கொட்டிய மத்தளமானேன்; அவள் கால் சிலம்பொலியிலேயே உலகம் இயங்குவதாக நான் உணர்ந்தேன்.
எங்கள் திருமணம் பேரரசின் ஏழுநாள் பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
அவள் என்னை மடிமீது கிடத்திக் கொண்டு பால் பழம் அருத்துவித்தாள். வியர்க்காத போதே விசிறினாள். இல்லாத தேவைகளை எல்லாம் இருப்பதாக எண்ணி அவற்றை நிறைவேற்றி என்னைக் களிப்பில் குளிப்பாட்டினாள். ஆனால் இவற்றாலும் அவள் உள்ளம் நிறைவடையவில்லை.
"என் செல்வக் குஞ்சுக்கு இன்னும் என்னென்ன வேண்டும்? நானே உங்களுக்கு இனி தாய் தந்தை, அண்ணன் தங்கை, தாரம் சந்ததி ஆகிய எல்லாமாய் இருக்கிறேன். என்னிடம் தயக்க மில்லாமல் எது வேண்டுமானாலும் கேளுங்கள்" என்றான்.
“எனக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால்..”
66
"ஆகா, என் குஞ்சுக்கு என்ன வேண்டும்? வானத்து மதி வேண்டுமா? வையகத்துச் செல்வம் வேண்டுமா? என்னென்ன வேண்டும்? உடனே வருவிக்கக் காத்திருக்கிறேன்" என்றாள்.
நான்..
நீ
"வேறொன்றுமில்லை. நீ இளவரசி, பேரரசன் புதல்வி.
அவள் பேசவிடவில்லை. "இவ்வளவுதானா? தெம்மூல நாட்டுக்கு இப்போது அரசரில்லை. அப்பாவிடம் நாளையே சொல்கிறேன்.”
"தெம் மூலநாடா! தெம்மூலம்-தென்மூலம் அல்லவா அது?"
“உங்கள் தாய் தந்தையர்களுலகத் தமிழின் இலக்கணம் அதெல்லாம்! எங்கள் உலகத் தமிழில் அவ்வளவு இலக்கணம் கிடையாது.ஆனாலும், இந்த உலகம் உங்களுக்கு இனிக்காதிருக் காது என்றே எண்ணுகிறேன். ஒரு நொடி இருங்கள். நான் வருகிறேன்” என்றாள்.