(160)
||–
அப்பாத்துரையம் - 34
தென்கரையாளன் ஒருபுறமும் ஏராரிளங்கிளி மற்றொரு புறமும்
ருந்தனர். ஏராரிளங்கிளியின் தோளுடன் தோளாகத் தளிர்க்கொடி துடங்கினாள். தளிர்க்கொடி வளர்ந்தபின் மக்களிடையே இளவரசி வழக்குத் தீர்க்கும் போதே நான் என் செல்வங்களிடையே வழக்குத் தீர்க்க வேண்டியதாயிற்று.
என் இன்பம் எல்லையற்றதாக, தங்கு தடையற்றதாக, கறையற்றதாகவே தோற்றிற்று. பேரரசப் பெருமானின் மற்ற மருமகனோ மக்களோ தத்தம் ஆட்சியை அவ்வளவு திறமையாக நடத்தவில்லையென்றும், என் ஆட்சியிலே என் தெம்மூலநாடு வளங்கொழித்ததென்றும் கேட்டுப் பூரித்தேன். ஆனால், அதில் என் திறம் எதுவும் இல்லை என்பது எனக்கு மட்டும் தெரியும். ஏராரிளங்கிளியின் முழுநிறை அன்புக்கும் பாத்திரமாய், ஆண்டுதோறும் அழகிய குழந்தைகளைப் பெற்ற ஒன்றே எனக்குப் போதிய திறமையாய் அமைந்தது.
ஆனால் அந்தோ! எதிர்பாராமல் என் இன்பக் கோட்டை சரிந்தது. அடுத்த தடவை இளவரசி கருவுற்ற போது அவளால் எழுந்திருக்கக் கூடவில்லை. ஆட்சி கலகலத்தது. எங்கும் பஞ்சம் தலையெடுக்கத் தொடங்கிற்று. குழந்தை பெற முடியாமலே அவள் கண் மூடியபோது, மக்கள் என் ஆட்சிக் கோளாற்றையும் மறந்து என்னுடன் கதறியழுதனர். பேரரசனும் பிற பெருமக்களும் வந்து ஆறுதல், தேறுதல் கூறினர். பேரரசன் அடுத்த புதல்வியையே ஆறுதலாகத் தருவதாக வாக்களித்தான்.ஆனால், நான் மறுத்துவிட்டேன். ஏராரிளங்கிளியின் கல்லறையே என் கல்லறையாக வேண்டுமென்று விரும்பினேன். பேரரசர் இதற்கு இணங்கவில்லை.
ஏரார் இளங்கிளியின் ளங்கிளியின் உடல் தெம்மூல நாட்டின் பெருமலை சென்றொடுங்கிய இடத்தில் மலையடியிலேயே புதைக்கப்பட்டது. அவளைப் புதைத்த இடத்தில் பல ஆளடி உயரமுள்ள ஒரு வெண் சலவைக்கல் நிறுத்தப்பட்டது. அதனைச் சுற்றிலும் ஒரு புதிய பூங்கா புனைந்தியற்றப் பட்டது. சலவைக்கல்மீது என் கட்டளைமீதே ஏரார் இளங்கிளியின் உருவும் என் உருவும், இருவர் இனிய காதல் வாழ்வின் சிறப்புகளும் என் ஆறாத் துயரும் சிறு காவியமாக்கப்பட்டுச் செதுக்கப்பட்டன.