சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
துயர் நாள்கள் கழிந்தன.
161
என் ஆட்சி புல்லாட்சியாயிற்று. மக்கள் எனக் கெதிராகக் கிளர்ந்தனர். இனிய கிளியை மணந்த பூனை நான் என்று கூக்குரலிட்டனர். பேரரசன் என்னை அழைத்து என் அரச ஆணையை அகற்றினான்.
“உன் தகா ஆட்சிக்கு உன்னைத் தூக்கிடுவதே சிதல்வாண அரசச் சட்டப்படி செய்ய வேண்டிய முறைமை, ஆனால், நீ என் இன்னுயிர்ப் புதல்வி இதயத்தில் வீற்றிருந்தாய். ஆகவே உன் தாயகம் செல்லலாம். உன்னை நாடு கடத்தியிருக்கிறேன் என்றான்.
"என் தாயகம் எது? என் ஏராரிளங்கிளியின் கல்லறை தானே?” என்றேன்.
66
இல்லை, உன்னை அரசமரத்தடியிலிருந்து தானே வரவழைத்தோம். போ, மீண்டும் மனித உலகில் ஆண்டியாகப் போய் நாட்கழி!” என்றான்.
நான் கண்விழித்தேன். இங்கு இருக்கிறேன் என்று மாந்தரன் முடித்தான்.
66
‘கனவு கனவு! அத்தனையும் பொய்க் கனவு” என்றனர் நண்பர்கள்.
'கனவா? இதோ நான் சென்ற பாதை!" என்று சுட்டிக் காட்டினான்,மாந்தரன்.
எல்லாரும் வியந்தனர். அது கறையான் தடம்; ஆனால், அது சற்று அகலமானதாகவே நெடுந்தொலை சென்றது.
மாந்தரன் வற்புறுத்தலின் பேரில் பாறைக்கோல், வாள், வெட்டுக்கத்தி முதலியன கொண்டுவரப்பட்டன.
மாந்தரன் கதைக்கும் அவர்கள் கண்ட காட்சிகளுக்கும் இடையே இருந்த வேறுபாடு ஒன்றே ஒன்று தான். மனிதரளவாக அவன் வருணித்த பொருள்களெல்லாம் கறையானாகக் காட்சியளித்தன. ஆனால், பாதைகள் கறையான் தடங்களாகவும், நகரம், அரண்மனை நீண்டகன்று சூழ்ந்து மரத்தின் வேரடியில் வளர்ந்திருந்த புற்றுகளாகவும், மலைகள் வேர்களாக ளாகவும்