(166)
||-
அப்பாத்துரையம் - 34
உங்கள் காலடிகளைச் சுற்றிக் கொண்டு கிடக்கும்" என்றாள் அந்தப் பெண்ணரசி.
அன்பும் பண்பும் பரிவும் மிக்க இந்தச் சொற்கள்கூட மலைதாங்கியின் சீற்றத்தைக் கிளப்பிவிட்டன. "சனியன், என்ன திண்ணக்கம் உனக்கு! பாம்புபோல் என் காலைச் சுற்றிக் கொண்டு வாழவிடாமல் செய்கிறேன். என்கிறாயா? பார்; உன் உறவினரை யெல்லாம் வருவித்து அவர்கள் கண் முன்னே உன் அட்டூழியங் களை எடுத்துக்காட்டி உன்னை இங்கிருந்து அவர்களுடனேயே துரத்துகிறேனா. இல்லையா பார்!” என்று குமுறினான்.
“உங்கள் பெண்ணுடன் நான் இனி ஒரு கணமும் வாழ முடியாது. அவள் செய்யும் அட்டூழியங்கள் எழுத முடியாது: ஏட்டில் அடங்காது. நீங்களே வந்து உங்கள் பெண்ணின் குடும்பத் திறமையைப் பார்த்துவிட்டு, அவளிடமிருந்து எனக்கு
விடுதலையளிப்பீர்களென்று நம்புகிறேன்.”
இம்மாதிரி கடிதங்கள் தாய் தந்தையருக்கு, தமக்கையர், தமக்கையர் கணவன்மாருக்கு, உறவினர்களுக்கெல்லாம் அனுப்பட்டன. விழுந்தடித்துக் கொண்டு சோடி சோடிகளாக, கும்புகும்பாக உறவினர் யாவருமே மலைதாங்கி வீட்டில் வந்திறங்கினர். பொலந்தாரழகி குடும்பம் நடத்தும் திறமை ஒரு சிறிய படையையும், ஒரு சிறு நகரத்தையும் போர்க்காலத்தில் நடத்தும் திறமையாக வளர வேண்டியதாயிற்று.
பெற்றோர் உறவினர் ஒவ்வொருவரும் அவளை ஒவ்வொரு வகையில் தாக்கினர்; சிலர் வைதனர்; சிலர் அழுதனர்; சிலர் கஞ்சினர்; தாய்ப்பாசம் தழுவித் தழுவித் தேம்பித் தேம்பி அழுதது. தந்தை முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டு முணுமுணுத்தார்; தமக்கையர் வசைமாரி பாடினர்; தமக்கையர் கணவன்மாரோ டிழைக்குள் முட்களையும் கூரிய ஊசிகளையும் புதைத்துவைத்து இடித்தனர்; அடிக்கடி அவள் கணவன் படைபடையாகக் குற்றச்சாட்டுகளை அவள் மீது ஏவிவிட்டு, அவளை உறவினர் துயராகிய படுகுழியில் தள்ள முயன்றான். இத்தனை தாக்குதல்களையும் சமாளித்து, அதனிடையே அத்தனை பேருக்கும் உணவு வசதி, குளிப்பு வசதி, படுக்கை வசதி, இருக்கை வசதிகள் செய்து கொடுக்கும் வேலையும் பொலந்தாரழகி மீது சாய்ந்தது.