பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

169

கெடாமலிருக்க அவற்றைத் தணல்காயும் கணப்படுப்பின்மீதும் குளிர்கெடாதிருக்க அவற்றை நீரிலும் பனிக்கட்டி மீதும் பக்குவப் படுத்தி வைத்தாள்.

மேசை மீதும் நாற்காலிகள் மீதும் அரிய வேலைப் பாடமைந்த பனி வெள்ளைத் துணிகளிட்டு அவற்றின்மீது பளபளப்பான வெள்ளிப் பளிங்குக் க் கலங்களையும் கரண்டிகளையும் அழகுபட ஒழுங்கு பண்ணினாள். ஆனால், விரித்த துணிமீது திடுமெனக் குருவியொன்று எச்சமிட்டு விட்டது. அவள் துணுக்குற்றாள். தன் கணவன் தான் மாயம் செய்து அக்குருவியை அனுப்பியிருக்கக் கூடுமோ என்று அஞ்சினாள். அதற்கேற்ப, அதைத் துப்புரவு செய்ய இடந்தராமல் கணவனும் பிறரும் திடுமென வந்து கதவைத் தடதடவென்று தட்டினர்.

சமயத்துக்கேற்ற அவள் அறிவுத்திறம் அவளைக் காத்தது. னிய தின்பண்டத்தால் அவள் எச்சத்தை மூடி. அதன் மீது சிங்காரமாக ஒரு தட்டத்தைக் கவிழ்த்து. அதன் மீது ஒரு கோப்பையை நிமிர்த்து வைத்துவிட்டு அவள் சென்று கதவைத் திறந்தாள்.

உறவினரும் கணவனும் உணவருந்தினர். மேடையருகே வேலை யாட்கள் எவருமே இல்லை. ஆனால், பொலந்தாரழகி பம்பரமாகச் சுற்றித் திரிந்து அவரவருக்கு வேண்டியவற்றை வேண்டிய உடனே தந்தாள். உறவினரும் எதுவும் குற்றம் காண முடியவில்லை. கணவன்கூட எதுவும் குறை காண இயல வில்லை. ஏனெனில் அவன், ஆவலுடன் எதிர்பார்த்தபடி அவள் தோட்டத்துக்கும் வீட்டுக்கும் செல்லவில்லை. சொத்தைச் சருகுகள்கூட அவள் கட்டளைக்கஞ்சியவைபோல் விழாதிருந்தன. அவள் ஒரு மாயக்காரிதானா என்று அவன் அஞ்சத் தொடங்கினான்.

அறிவிற் சிறந்தவர்களும் நிறை இன்ப நேரத்தில் தம் அறிவை ஒரு சிறிதே இழந்துவிடுவர் என்று கூறப்படுவதுண்டு. பொலந்தாரழகி வகையில் இஃது உண்மையாயிற்று. தன் வெற்றிமகிழ்ச்சியில் அவள் கணவனிடம் தானாகக் கிண்டல் பேசத் தொடங்கினாள். 'உங்களுக்கு எல்லாம் பிடித்தமா யிருக்கிறதா? இன்னும் ஏதாவது வேண்டுமா?' என்று கேட்டாள்.