(170) | ||-
அப்பாத்துரையம் - 34
தன் முழுத் தோல்வியினால் மனநைவுற்றிருந்தான் மலைதாங்கி, அதைப் பொலந்தாரழகி அப்படிப் பலர் முன்னிலையில் தன் முகத்துக் கெதிரே எடுத்துக் காட்டியது கேட்டு அவன் உள்ளம் புகைந்தெழுந்தது. 'ஏன்? உன் பாட்டி ஒரு குருவியாய் வந்து இங்கே எச்சமிட வேண்டும். அஃது ஒன்றுதான் குறை!' என்றான்.
திடுமென அவள் முகத்தில் ஒரு மின்னல் மின்னிற்று.
"ஆகா! அப்படியே முன்கூட்டி வரவழைத்து எச்சமிட வைத்திருக்கிறேன். உங்கள் பக்கத்திலேயே! இதோ பாருங்கள்” என்று கூறி அவள் நிமிர்த்திய குவளையையும் கவிழ்த்திய தட்டத்தையும் எடுத்துக் காட்டினாள்.
ய
மலைதாங்கியின் முகம் சட்டென்று கறுத்தது. ஆனால், அதே சமயம் உறவினர் மட்டுமன்றித் தொலைவில் நின்றும் வேலிக்கப்பாலிருந்தும் வேடிக்கை பார்த்த மக்களும் இடி இடி என்று நகைத்துக் கைகொட்டி ஆர்ப்பரித்தனர்.
கணவன் தனிப்பட்டு அவதியுறுவது கண்ட பொலந்தாரழகி சட்ெ ன அவன் காலில் சென்று விழுந்தாள். கோவென்று அழுதாள்.
"எல்லாரும் உங்களைக் கண்டு சிரிக்கும்படி நானே செய்து விட்டேன். நீங்கள் என்னைப் பற்றிக் கூறிய குற்றச் சாட்டுகள் அத்தனையும் உண்மை. என்னை இன்று மன்னித்து விட்டால், இனி உங்கள் மதிப்புக் கேற்ப நடப்பேன். என்னை மன்னியுங்கள்” என்று மன்றாடினாள்.
மலைதாங்கியின் கல்மனமும் அச்சமயம் முற்றிலும் கனிந்துவிட்டது. அவன் அனைவர் முன்னிலையிலும் அவளைத் தூக்கி எடுத்து அருகே அமர்த்திக் கொண்டான். "உன் அருமையை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், இன்றே நான் உணர்ந்தேன். உனக்கும் உன் உறவினருக்கும் இதுவரை செய்த அநீதிகளுக்கு மனமார வருந்துகிறேன். எல்லாருக்கும் தக்க சரியீடு செய்வது இனி என் கடன். அத்துடன் என் அலுவலகத்தில் இதுவரை நான் காட்டி வந்த கடுமையையும் நான் ஒழிக்க இஃது ஒரு படிப்பினையாகும்" என்றான்.