பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

175

கேலி பேசினான். அதுகேட்டு அவள் சிரித்தாள். அவனும் சிரித்துவிட்டான். அவள் அச்சம் அகன்றது.

(நண்பர்கள் மூவரும் வழிமனைவாணன் கதை கேட்டு ஊள்ளூரச் சிரித்தார்கள். ஆனால், வேண்டுமென்றே பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்கள். அது கண்ட வழிமனைவாணன் தன் கதைக்குச் சரியான முத்தாய்ப்பு வைக்க முனைந்தான்.)

“கதையில் வரும் இந்தப் பெண் யார் தெரியுமா?" என்று

கேட்டான்.

அவர்கள் தம் உறுதியை மறந்தனர். “யார்? யார்!” என்று ஆவலுடன் கேட்டனர்.

அமைதியாக, “என் மனைவி!” என்றான் வழிமனைவாணன். மூவரும் ஒவருவர்மேல் ஒருவரும் வழிமனைவாணன் மேல் அனைவருமாக விழுந்து விழுந்து சிரித்தனர்.

அதனிடையே வழிமனைவாணன் தன் கோரிக்கையை

நீட்டினான்.

'உங்கள் சிரிப்பாலேயே என் கதையின் முதன்மைச் சிறப்பை நீங்கள் ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். மொத்தக் கணக்கு முப்பது வெள்ளி. மூவருமாகத் தொண்னூறு வெள்ளி நம் கட்டுப்பாட்டின் படி எனக்குத் தரவேண்டும்" என்றான்.

வேடம்பி சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசினான்:

66

'அந்தப் பீரங்கி அழகியைக் கொஞ்சம் பார்க்க வேண்டும். அதன்பின் தான் கதையையும் நம்ப முடியும்: கணக்கையும் தீர்க்க முடியும்" என்று கூறி அவன் பதிலுக்குக் காத்திராமல் அவனை முன்னே தள்ளிக் கொண்டு சென்றான்.

வழிமனை வாணனை

வேடம்பியும், வேடம்பியை மாடம்பியும், மாடம்பியைக் காடம்பியுமாகத் தள்ளிக் கொண்டே மேல்மாடி ஏறினர்.

கலவரம் கேட்டு வழிமனை வாணன் மனைவி அப்போது தான் நடுத் தூக்கத்தில் எழுந்து கதவைத் திறந்து கீழே வரத் தொடங்கியிருந்தாள். முதல் படியில் கால் வைத்ததுமே கதையில் கேட்டதைவிடப் பன்மடங்கான, முழக்கத்துடன் வேட்டுக்கள்