அப்பாத்துரையம் - 34
178) ||__ கெடுதல் செய்யவுங் கூடும்" என்று அம்பலவாணர் அவர்களை எச்சரிப்பதுண்டு. ஆனாலும் அவர்களை அறியாமல் அவர்கள் கால்கள் அடிக்கடி அப்பக்கம் சென்றன.
உண்மையாகவோ, அச்சங் காரணமாகவோ, சில சமயம் எதிர்பாராக் காலடி ஓசை கேட்டு, அல்லது விசித்திர நிழலுருவங்களைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓடி வருவர், இதனை அடுத்துச் சில நாட்கள் அவர்கள் அப்பக்கம் நாடுவதில்லை. ஆனால், நாட் செல்லச் செல்ல அச்சம் நீங்கிவிடும். மீண்டும் அங்கே ஊடாடுவர்.
பள்ளி விடுமுறைக் காலத்தில் ஒரு நாள் அவர்கள் தோழர்களில் பலர் அண்டையூரிலுள்ள ஒரு விழாவுக்குச் சென்றிருந்தனர். அம்பலவாணருக்குச் சற்று உடல்நலிவா யிருந்ததனால், தவிர, விழாவுக்குச் செலவு செய்ய அவர்களிடம் ஆளுக்கு ஒரு காசுக்கு மேல் கையிலில்லை. ஆகவே விழாவுக்குப் போகாத குறைக்கு அவர்கள் சித்தர் மேட்டுக்குச் செல்ல எண்ணினர். காலைச் சிற்றுண்டிக்குப்பின் தந்தைக்கு வேண்டும் உதவிகளைச் செய்துவிட்டு இருவரும் அப்பக்கம் நடையைத் திருப்பினர்.
அன்று வழக்கமீறி மப்பு மந்தாரமாயிருந்தது. ஆகவே காலை ஒன்பது மணியாகியும் புல் நுனிகளிலும் இலை நுனிகளிலும் பனித்துளிகள் உலரவில்லை. சிலந்தியின் வலைகள் இப் பனித்துளிகள் தோய்ந்து, வான வில்லின் ஏழு நிறங்களுடன் மிளிர்ந்தன. அலர்ந்த பூக்களும், அரும்புகளும் மொட்டுக்களும் கொத்துத் கொத்தாகத் தொங்கின அழகில் ஈடுபட்ட வண்ணம் கோகழியும் கொண்டலும் வழக்கமீறி நெடுநேரம் திரிந்து, வழக்கமீறி நெடுந்தொலை சென்று விட்டனர். ஒரு திருப்பத்தில் அவர்கள் கண்ட காட்சி கனவிலும் காணுதற்கரியதாய் அமைந்தது.
அது ஒரு விழாக் காட்சியே, ஆனால் அந்த மாதிரி விழாக் காட்சியை அவர்கள் எங்கும் கண்டதும் இல்லை.காண எண்ணியது மில்லை. பெரிய காளான்போல வண்ணந் தீட்டப்பட்ட சுழல் குடைகளில் வண்ண வண்ண ஆடையுடுத்த சிறுவர், சிறுமியர், குழந்தைகள் பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருந்தனர். மான்கள், மிளாக்கள், வரிக் குதிரைகள், முயல்கள் ஆகியவை குதிரைகள்