பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182

அப்பாத்துரையம் - 34

கோகழியின் தலைப்புச்சியில் சிகப்புக் குல்லாப் போல ஏதோ தெரிந்தது. “என்ன அது உன் தலைமேல் கோகழி!” என்று கேட்டாள்.

அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் “கொ... கொ... கொ...ள்” என்று கூறி நிறுத்தினான்.

'கொண்டல்' என்று கூற முடியாமல் கொன்னுகிறான் என்று அவள் எண்ணினாள்.

"இப்படி என்றும் நீ கொன்னுவதுகிடையாதே!

ஏன்!...?”

ன்று

அவள் பேசி முடிப்பதற்குள் கோகழி தற்செயலாக முகத்தை அவள் பக்கம் திருப்பியிருந்தான். அந்த முகத்தைக் கண்டதே அவள் தின்ன எடுத்த எழுத்துருண்டை மட்டுமன்றி, பொட்டலம் முழுவதுமே கீழே விழுந்துவிட்டது.

அந்த முகத்தில் அவன் மூக்கும் வாயும் பறவைகளின் ஓர் அலகாய் மாறியிருந்தது. தலையில் தோன்றிய சிவப்பையும் “கொ- கொ' என்ற குரலையும் இதனுடன் சேர்த்து நினைக்கவே கொண்டலுக்கு நடுக்கமாயிற்று. அவள் “ஐயோ, அண்ணா! என்ன செய்து விட்டாய்! அந்தப் பேய் உருண்டை உருண்டையோ?” என்று குத்திக் கொண்டு அழுதாள்.

என்ன

அவனும் அருகே குந்தினான். ஆனால், அவனுக்குப் பேச வாயில்லை. தலை முழுதும் கோழித் தலையாய் விட்டது. சிறிது நேரத்துக்குள் கழுத்தும் உடலும் மென்மயிர் இறகும் அடர்ந்தன. கையும் ஆடையும் இறக்கைகளாக மாறின. கால்கள் ஒடுங்கி மரமரப் புற்றுக் கோழிக்கால்களாயின. அந்தோ! இறுதியாக, அவன் அழகிய காலடிகள் முக்கவர் முட்கள் ஆயின.

அவள் கோழியுருவாய்விட்ட அண்ணனைக் கட்டி அணைத்து அலறினாள். அவன் கோழி யுருவிலும் தங்கை துயரும் அன்பும் முற்றிலும் உணர்ந்தவன் போல அவள் கன்னங்களை அலகால் கோதினான்.

இந்தப் பெருந்துயரில் அவள் இப்போது அண்ணனுடன் பேச, அண்ணனுடன் திட்டமிட முடியவில்லை. அவள் தனியே சிந்தித்துத் தனியே வழி காண வேண்டியிருந்தது.