12. சொல்லும் செயலும்
விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று அயர்வகற்றும் மனவளமுடையவர்கள் தமிழினத்தவர். இப்பண்பில் தவழ்ந் தாடிற்று. கோடிக்கரை, ஏனெனில் அதன்மீது அலைவீசிய கடலுக்கு அப்பால் ஒரு தமிழகமும், இப்பால் ஒரு தமிழகமும் இருந்தன. இரண்டின் பண்பு வளங்களும் கோடிக்கரையில் கூடின. முத்தமிழகத்தின் பக்கத்திலிருந்தோ, ஈழத் தமிழகப் பக்கமிருந்தோ கோடிக் கரைக்கு வந்த எந்த ஏழையும் அங்கிருந்து என்றும் மிடியுடன் மீண்டதில்லை.
ஏழைகளைப்பேணும் பண்பு வேறு.அரசியல் சான்றோர்களை வரவேற்கும் ஆரவாரம் வேறு. முன்னைய பண்பில் நிறைவு எய்திய கோடிக்கரைக்குப் பின் கூறப்பட்ட பண்பு வகையில் ஒரு சோதனையோ, வாய்ப்போ என்றும் ஏற்பட்ட தில்லை. ஏனெனில் அரசியலாளர் தமிழகத்தின் மற்றப் பெரிய சிறிய நகரங்களுக் கெல்லாம் வருவதுபோலக் கோடிக்கரைக்கு வந்ததில்லை.
குறைந்த காலத்தில் மிகப் பெருந்தொகையான இடங்களுக்குச் சென்று புகழாரவாரம் பெறுவதில் அவா உடையவர்கள் அச்சான்றோர்கள். ஒரு நகரஞ் செல்லும் போதே, அதைச் சூழ இருந்த இடங்களுக்கும் அவர்கள் செல்லத் திட்டமிட்டு விடுவார்கள். கோடிக்கரைக்குச் செல்ல எண்ணுபவருக்கு இந்த வாய்ப்புக் கிடையாது. அங்கே செல்பவர் அங்கேதான் செல்ல வேண்டும். அது கடந்து வேறெங்கும் செல்ல முடியாது. அது ஒரு கோடியின் முனையிலே அமைந்திருந்தது. அதைப் பார்த்தபின் போன வழியிலே திரும்பி வந்துதான் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியும்.
கோடிக்கரைக்கு எந்த அரசியலாளரும் வராததற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. பெரும்படிக் கட்சி, ஆரவாரக் கட்சி என்ற நாட்டின் இரண்டு கட்சிகளுமே அந்நகரில்