சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
189
இல்லையானால் அவர் அழகுருவம் ஒரு தலைவருக்குரிய வீறுபெற்றிருக்க முடியாது என்னலாம்.
நகரில் இரு கட்சித் தலைவர்களுமே தத்தம் கட்சிகளுக்கு ஈடும் எடுப்புமற்ற சர்வாதிகாரிகளாக இருந்தனர். ஆனால், நகரம் இரண்டு சர்வாதிகாரிகளின் ஆட்சியைத் தாங்க மாட்டாமல், எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது. ஏகம்பவாணர் இல்லாமல் அந்த நகரத்திலோ அதன் சுற்றுப்புற மாவட்டங் களிலோ கூட எதுவும் நடக்க முடியாது. ஏனென்றால், அவர் வாழ்நாள் முழுவதும் அவரே நகரவைக்குத் தலைவர்; போக, மாவட்ட நிலக்கிழார் சங்கம், ஆலை முதலாளிகள் சங்கம், ஊர்தி முதல்வர் சங்கம் ஆகியவற்றின் தலைவரும் அவரே, அவர் தயவில்லாமல் எவரும் நகரத்தில் வாழவும் முடியாது, நகரத்தை விட்டு எங்கும் போகவோ, வரவோகூட முடியாது. நகர வாழ்வு என்னும் தோட்டத்திலே உள்ளும் புறமும் அவர் ஒரு மதயானை போலத் திரிந்தார். ஆனால்; அவர் கட்சிக்கு எல்லா வகையிலும் எதிர்கட்சியாகவே நித்திலச் செல்வர் நிலை இருந்தது; இவர் நகரின் துறைமுக ஆட்சிக் குழுவின் தலைவர்; தவிர நகரிலும் நகரைச் சுற்றியிருந்த மாவட்ட முழுவதும் உள்ள வாணிகச் சங்கங்கள், தொழிற் சங்கங்கள், தொழிலாளர் கூட்டுறவுகள், கூட்டுறவுப் பண்ணைகள், கலைக் கழகங்கள், இலக்கியக் கழகங்கள் முதலிய யாவுமே அவர் கைப்பிடியில் இருந்தன. அவர் நினைத்தால் மாவட்டத்திலேயே விலையை ஏற்றவும் இறக்கவும் முடியும்; ஏற்றுமதி இறக்குமதிகளைத் தடுக்க முடியும். நிலக்கிழாரின் நெல் மாவட்டத்துக்குள்ளே செலாவணியாகாமல் செய்ய முடியும்; ஆனால் கடற் போக்குவரத்தன்றி நிலப் போக்குவரத்தை அவர் பயன்படுத்த முடியவில்லை. வெளியூர் செல்ல வேண்டுமானால், அவர் கடல்வழிதான் செல்ல வேண்டும். அல்லது அரசியலார் நேரடி ஆட்சியிலுள்ள தொடர் ஊர்தியில் செல்ல வேண்டும். மற்ற எல்லாத் தனி ஊர்திகளும் ஏகம்பவாணர் கட்டளையின் கீழ் இயங்கின.
நகராட்சியில் சரிசம வலுவுடைய இரண்டு சர்வாதி காரிகளும் எதிரியைத் தாண்டிச் செல்வாக்குப் பெற மாகாண ஆட்சியையும் துணைக் கொள்ள விரும்பினர். பெரும்படிக் கட்சியாளருக்கு மைய ஆட்சியின் பிடி இருந்தது. இதனால், மைய