அப்பாத்துரையம் - 34
(192) ||_ பெரும்படிக் கட்சியினர் எப்போதும் ஆட்சியாளர் பக்கமே இருப்பவர்கள். அவர்கள் திட்டங்களை ஆதரித்துப் புகழ் பாடுவார்கள். ஆனால், புதிய முதல்வரை எதிர்ப்பதில் அவர்கள் ஆரவாரக் கட்சியைச் செயலற்றதாக்கிவிட்டனர். முதல்வர் வருகிற நாளில் வேண்டுமென்று பலர் பேசினர். அவருக்குக் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புக் கூற வேண்டுமென்றனர் சிலர்; அவர் உருவில் கொடும்பாவி கட்டி இழுக்க வேண்டுமென்றுகூட ஒருவரிருவர் கூக்குரலிட்டனர். தனிப்பட்ட முறையில் வந்தால்கூட, பெரும்படிக் கட்சியைச் சேர்ந்த எவரும் அவரைச் சந்திக்கக் கூடாதென்றும், என்னவிலை தந்தாலும்கூட, அக்கட்சியாளர் அவருக்கு வண்டிவிடவோ, உணவு முதலிய வசதிகள் அளிக்கவோ கூடாதென்றும் கண்டிப்பான முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.
நகரவைக் கூட்டம், நிலக்கிழார் சங்கம், ஊர்தி முதல்வர் சங்கம் முதலிய பெரும்படிக் கட்சியாதரவாளர் நிலையங்கள் யாவுமே முதல்வர் வரவேற்பின் எதிர்ப்பில் ஒன்றுடனொன்று போட்டியிட்டன. ஒன்றைவிட ஒன்று தீவிரமான கண்டனங்கள் தெரிவித்தன.
வியத்தகு முறையில் ஆரவாரக்கட்சியின் நடவடிக்கைகளும் தீர்மானங்களும் பெரும்படிக் கட்சியைத் தலைகுனிய வைத்தன. முதல்வர் வருகிற நாளுக்கு ஒருநாள் முன்பிருந்தே தொடங்கி, அவர் வேறிடம் சென்றுவிட்டதாக அறியப்பட்டதன் பின்னும் ஒரு நாள்வரை எல்லாத் தொழிலகங்களும் மூடப்பட வேண்டு மென்று அவர்கள் முடிவு கட்டினர். இதனுடன் அமையாப் பல தீவிரவாதிகள் அவர் வரவுக்குத் துக்கம் தெரிவிக்கும் முறையில் எல்லாரும் கறுப்புத் துணியால் முக்காடிட்டு ஊர்வலம் வரவேண்டுமென்றும், ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் தவிர மற்றெல்லாரும் உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தத்தம் கட்சிப் போக்கை இதுவரை இயக்கியவர்கள் அவற்றின் சர்வாதிகாரிகளான தலைவர்களே. ஆனால், கோடிக் கரையின் வரலாற்றில் முதல் தடவையாக, தலைவர்கள் இப்போது தத்தம் கட்சிப் போக்கில் மிதக்க வேண்டியவராயினர். இதை வெளிக்குத் தெரியாமல் மறைக்க வேண்டுமானால், தத்தம்