பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

193

கட்சியின் தீவிரவாதக் குரலை அவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் காலக் கேடாக, இருவர் உள்ளங்களும் கட்சிச்சார்பற்ற தனி, அவாக்களிலேயே சுழன்றன. இரு கட்சிகளின் எதிர்ப்பினாலும் மனக்கசப்புற்ற முதல்வருக்கு இப்போது எந்தத் தனி மனிதராவது சிறு ஆதரவு காட்டினாலும் அவரை அவர் ஆதரித்து உயர்த்திவிடுவது உறுதி என்பதை அவர்கள் அறிந்தனர். தாமே அதைத் தனிப்பட்ட முறையில் செய்வதானால், எதிர்கட்சியையும் எதிர்கட்சித் தலைமையையும் தாண்டி வளர்ந்துவிட முடியும் என்று அவர்கள் மனப்பால் குடித்தனர்.

பெரும்படிக் கட்சி எப்போதுமே பட்டம் பதவிகளை விரும்புவது. முதல்வரை வரவேற்க முடியுமானால், முன் எந்தப் பெரும்படித் தலைவரும் பெறாத உயர் பட்டமும் பதவியும் தமக்குக் கிடைத்துவிடும் என்று ஏகம்பவாணர் திட்டமிட்டார். அதேசமயம், கிட்டத்தட்ட அதே எண்ணம் நித்திலச் செல்வர் உள்ளத்திலும் வேறொரு வடிவில் எழுந்தது. ஆரவாரக் கட்சி பட்டம் பதவிகளைச் சாடுவது. ஆனால், பட்டம் பதவி துறப்பவர்களின் உயர்வு அவர்கள் துறக்கும் பட்டம் பதவிகளின் உயர்வுக்கேற்ப மதிப்புப் பெறும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே, சூழலைப் பயன்படுத்தி, முதல்வர் மிக உயர்வான பட்டம் பதவி அளிக்கச் செய்து. அவற்றை இன்னயத்துடன் மறுத்து, ஆட்சியாளர் பாசத்தையும் மக்கள் நேசத்தையும் ஒருங்கே பெற்றுவிடலாம் என்று அவர் கனாக் கண்டார்.

கட்சிக் கூட்டங்களின் போக்கு இரு தலைவர்களுக்கும் தலைவலியாயிருந்தது. தலைமைப் பதவியைக் காத்துக் கொள்ளுவதற்காகத் தீவிரக் குரலில் பேச வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் உள்ளவாக் கட்சியினர் மாட்டான எதிர்ப்பைக்கூட விரும்பவில்லை. இந்த நிலையில் அவர்கள் சில வீம்பு வெற்றுரைகளுடன் வாளா இருந்தனர். தீர்மானங்களின் சொற்றொடர்களில் சிலவற்றை மாற்றியமைத்ததுடன் அவர்கள் மனமைந்தனர்.

பெரும்படிக் கட்சியிலிருந்து விலகாமலே ஆரவாரக் கட்சியிலும் மறைந்து ஊடாடியவன் பிள்ளைப் பெருமாள். அவன் இரு தலைவர்களின் உள்ளார்ந்த விருப்பங்களையும் நன்கு