சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
195
இருவரும் ஒருவர் அறியாமல் ஒருவர் நிலையத்தில் வந்து நின்றனர். அவர்கள் எதிர்பார்த்த ஊர்தியிலிருந்து பெருந்திரளான மக்கள் இறங்கினர்; பெருந்திரளான மக்கள் அதில் ஏறினர்; முதல்வர் தனிப்பட்ட முறையிலேயே வருவதாயிருந்ததனால், யார் முதல்வர் என்று அறியாமல், அவர்கள் இறங்குபவர் ஒவ்வொருவரையும் பார்த்துக்கொண்டே செல்ல வேண்டியதாயிற்று.
தவறான
முதல்வர் வரும் ஊர்தி பற்றிப் பிள்ளைப் பெருமாள் இரு தலைவர்களுக்கும் வேண்டுமென்றே தவறான தகவல் கொடுத்திருந்தான். இதனால் அவர்கள் இரகசிய நடவடிக்கைகள் அவர்கள் எதிர்பார்த்த அளவில் முழுவதும் இரகசியமாயிராமல், பலருக்கும் அம்பலப்பட்டுவிட்டது. அத்துடன் கூட்ட நருக்கடியில் முதல்வரை எங்கே அடையாளம் அறியாமல் போக விட்டுவிட்டோமோ என்று இருவரும் கலக்கமடைந்தனர். ஊர்தி சென்றபின் பிள்ளைப் பெருமாள் இருவரிடமும் தனித்தனியாகக் குறும்புச் சிரிப்புடன். 'முதல்வர் வரும் ஊர்தி இதுவல்ல, அடுத்து வருகிறது' என்று கூறியபின் தான் அவர்கள் முகத்தில் மீண்டும் உயிர்க்களை வந்தது.
அடுத்த ஊர்திவர அரைமணி நேரம் இருந்தது. அதுவரை இருதலைவர்களும் பொறுமையிழந்து பக்க மேடையில் முன்னும் பின்னும் நடந்தனர்.
இரு தலைவர்களும் தலைவர்களானபின் ஒருவரை ஒருவர் நேரடியாகச் சந்தித்தது கிடையாது. ஆனால், இருவருமே ஒரே ஊரிலிருந்து பிழைப்புத்தேடி முப்பது ஆண்டுகளுக்குமுன் அந்நகருக்கு வந்தவர்கள். ஒருவர் வட்டிக் கடையில் பொருளும் நிலமும் ஈட்டி, தம் பெயரை மாற்றி நிலக்கிழார் ஏகம்பவாணர் ஆயிருந்தார். தம் பழைய எளிய வாழ்வைக் கூடிய மட்டும் தாமும் மறந்து பிறரையும் மறக்கடிக்க முயன்று வந்தார். தம் முன்னோரும் தம்மைப் போல நிலக்கிழாராகவே பல தலைமுறை இருந்ததாக அவர் கதைகட்டி நிலக்கிழாரின் கட்சியில் தன் மதிப்பையும், பெருமையையும் காத்து வந்தார். ஆனால், நிலத்திலச் செல்வர் கூலி வேலையிலிருந்து தாம் படிப்படியாக முன்னேறி உயர்வுற்றதை மறக்கவில்லை. எவரையும் மறக்க வைக்கவும் ல்லை. மணிவேல் என்ற தன் இளமைப் பெயரை மாற்றி