(196) ||
அப்பாத்துரையம் - 34
வைத்துக் கொண்டாலும், இதையும் அவர் பெருமையாகவே கூறிக் கொள்ளத் தயங்கவில்லை. எதிரெதிராக இருவரும் ஒருவரையொருவர் கண்டசமயம் அவர்களுக்குத் தங்கள் புதுத் தலைமை வாழ்வு மட்டுமன்றி, இந்தப் பழைய வாழ்வுச் செய்திகளும் நினைவுக்கு வந்தன.
நித்திலச் செல்வர் குறும்பாக ஏகம்பவாணரை அணுகிப் பேச்சுத் தொடங்கினார்:
66
ஏது, இத்தனை தொலை, வாணரே! எந்தப் பெரிய தலைவரை எதிர்பார்த்து இப்படிக் காத்து நிற்கிறீர்?” என்றார்.
‘ஏகம்பவாணர் முகம் சுருங்கிற்று. ஆனால், அவர் அதைக் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டார்.
66
“என் மைத்துனர் ஒருவர் ஊர்தியில் செல்கிறார். அவசரமாக ஒரு தகவல் கூறவேண்டுமென்று தந்தி கூறினார். அதற்காகவே வந்தேன். நீங்கள் இவ்வளவு தொலை வந்து எத்தகைய பெரியவரை எதிர்பார்க்கிறீர்களோ?" என்று கேள்வியைத் திருப்பினார் ஏகம்பர்.
நித்திலச் செல்வர் இன்னும் எளிதாகத் தம்மைச் சமாளித்துக் கொண்டார்.
"என்னைப் போலப் பொதுவாழ்வையே வாழ்வாகக் கொண்டவனுக்குப் பெரியவராவது. சிறியவராவது! நகருக்கு யார் புதிதாக வந்தாலும், அவர்கள் வாய்ப்பு வசதிகளை நான் வந்துதான் கவனிக்க வேண்டியிருக்கிறது!” என்றார்.
நகர வாழ்வில் ஏகம்பவாணர் இன்றியமையாதவர் அல்ல, தாமே இன்றியமையாதவர் என்ற நித்திலச் செல்வர் குறிப்பு ஏகம்பவாணரை விலாவில் குத்துவது போலிருந்தது. அந்தப் பேச்சை மாற்றி அவரை இதுபோலக் குத்திக்காட்ட அவர் துடித்தார். நித்திலச் செல்வர் தமக்குச் சரிசமமானவரல்ல, தொழில் செய்து பிழைக்கும் வகுப்பினர் என்று சுட்டிக்காட்ட விரும்பினார்.
“உங்கள் கடையை மூடிவிட்டுத்தானே இங்கே வந்தீர்கள்? அதைப் பார்க்க யாரும் இருக்க மாட்டார்களே!" என்றார். நித்திலச் செல்வர் தாம் ஒரு தொழிலாளி என்று கூறுவதில்