சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
197
தயங்குவதில்லை. அதையே பெருமையாகக் கொண்டவர் என்பது ஏகம்பருக்குத் தெரியாது.
"நானே தனியாகக் கடையைப் பார்த்த காலமும் உண்டு; தனியாகத் தெருவில் கூலியாகத் திரிந்த காலமும் உண்டு; ஆனால் இப்போதெல்லாம் கடை மேலாள் இருக்கிறார். மாலை நேரத்தில்தான் நான் இருப்பது அவசியம்” என்றார்.
தம் குத்தல் பேச்சில் எதிரி மசியாதது கண்டு, ஏகம்பர் பின்னும் தம் குத்தலை வலிமைப்படுத்தினார்.
66
“தம் தொழிலைத் தாமே பார்க்க வேண்டிய நிலையிலுள்ளவர்கள் பொதுத் தொண்டுக்குத் தகுதியற்றவர் களல்லவா?”
நித்திலச் செல்வருக்கு இக்கேள்வி ஓர் அரிய வாய்ப்பாயிற்று. "தமக்கெனத் தொழில் இல்லாதவர்கள்தான் பொதுவாழ்வைச் சாக்கிட்டு சுரண்டல் வேலை நடத்துகிறார்கள். அதுவே, அவர்களுக்குத் தொழிலாகி விடுகிறது. வருவாய்தரும் துறையாகிவிடுகிறது!”
66
ஏகம்பவாணர் தம் பேச்சை அத்துடன் நிறுத்திக் காண்டார். அவருக்கு அதற்குமேல் பேசவும் இடம் இல்லை. கூகூ" என்ற குரலுடன் ஊர்தி மேடை நோக்கி வந்தது.
இத்தடவை முதல்வர் யார் என்று தேடும் அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை. அந்த ஊர்தி முதல்வருக்கென்றே விடப்பட்டிருந்ததால், அவரும் அவர் மூட்டை முடிச்சுகளும் தவிர வேறு எதுவும் அதில் இல்லை. தவிர அவரை வரவேற்ப தாக முன்பே எழுதித் திட்டம் செய்திருந்தவர் பிள்ளைப் பெருமாள். அவர் ஒரு நிலையம் முன்னதாகச் சென்று, அவரை வரவேற்று ஊர்தியிலேயே உடன் வந்தார். ஆனால், இறங்கிய சமயம் இரு தலைவர்களையும் கண்டதாக அவர் காட்டிக் கொள்ளவேயில்லை.
ய
இரண்டு தலைவர்களுள்ளும் ஏகம்பவாணரே முதலில் முதல்வரை அணுகியவர். தலையணியைக் கையில் பிடித்துக் கொண்டு வெள்ளையரைப்போல உடலை முடக்கி அவர் வணக்கம் செய்ய முயன்றபோது, அது எவரும் கண்டு நகைக்கத்தக்க காட்சியாகவே இருந்தது. நித்திலச் செல்வருக்கு