பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

5

அங்கனுக்கு ஒன்றும் மறுமொழி கூற முடியவில்லை. அவன் நாள்தோறும் ஒரு மாவிலைச் சோற்றைமென்று, வயிற்றைத் தண்ணீரால் நிரப்பிக் கொண்டே வேலை செய்தான். இரண்டொரு நாட்களுக்குள் அவன் உடல் இளைக்கத் தொடங்கிற்று. ஒரு வாரத்துக்குள் அவன் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாதவன் ஆனான்.

அரங்கன் ஒருநாள் அண்ணனிடம் சென்றான். அவன் நிலைமை கண்டு மனம் பதைத்தான். சட்டநாதரிடம் செய்த ஒப்பந்தத்தையும் அதன்பின் நிகழ்ந்ததையும் அங்கன் அவனிடம் சொன்னான். அரங்கன் முதலில் சீறினான்.பின், “அந்த வேலையை விட்டுவிடு வேண்டாம்” என்றான்.

"வேலையை நானாகவிட்டு வந்தால், மூக்கை அரிந்து கொடுக்க வேண்டுமே, என்ன செய்வேன்" என்றான் அங்கன். அரங்கன் சிறிது நேரம் சிந்தித்தான். அவன் மனத்தில் ஒரு திட்டம் தோன்றிற்று.

“அண்ணா, நான் சொல்கிறபடி கேள்" என்றான்.

“உனக்கு உண்மையிலேயே உடல் நோய்ப்பட்டிருக்கிற தல்லவா? அதைச் சொல்லி, இரண்டொரு நாள் ஓய்வுகேள்” என்றான்.

அங்கன், “சரி, அவ்வாறே கேட்கிறேன்” என்று புறப்படத் தொடங்கினான்.

அரங்கன் அவனைத் தடுத்து நிறுத்தினான். “அவ்வளவு எளிதாக ஒரு முடிவுக்கு வந்துவிடாதே. அண்ணா! நீ ஓய்வு கேட்டு, அவர் கொடுக்க மறுத்தால் என்ன செய்வாய்?” என்றான்.

அங்கன் விழித்தான். “ஓய்வு தராவிட்டால் வேறு என்ன செய்வது? இப்படி நோயோடு நோயாக உழைத்துச் சாக வேண்டியது தான்” என்று அங்கன் அழாக் குறையாய்க் கூறினான்.

அரங்கன் சிரித்தான். "காரியம் அவ்வளவு மோசமாய் விடவில்லை. அவர் ஓய்வு தராவிட்டால், நீ பின்னும் அவரிடம் நயந்து ஒரு காரியம் கோர வேண்டும். 'என்னைவிடத் திடமான உடலுடைய தம்பி ஒருவன் எனக்கு இருக்கிறான். எனக்குப்