பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(206) ||

அப்பாத்துரையம் - 34

‘முக்கு! நான் உணவு கண்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், பட்டினி கிடந்தாவது நான் என் கையில் கிடைப்பதை உனக்குக் குறைவில்லாமல் அளித்து வந்தேன். இப்போதோ எனக்கும் ஒன்றும் இல்லை; ல்லை; உனக்கும் உனக்கும் ஒன்றுமில்லை; எங்கிருந்தாவது உணவு தேடிக் கொண்டு வந்தால் உண்டு. இல்லையானால், இரண்டு பேரும் பட்டினிதான்; நீ இன்னும் வேலை தேடாவிட்டால், நான் இனி வீடு வீடாகச் சென்று வேலை தேட வேண்டும்; அதுவும் கிடைக்காவிட்டால், பிச்சை எடுக்க வேண்டியதுதான்' என்றாள் அவள்.

அவள் கண்களிலிருந்து சூடாக இரண்

கண்ணீர் அவன் கன்னத்தில் விழுந்தது.

ரண்டு சொட்டுக்

என்னிடம்

ஏன்

அவன் நிமிர்ந்து தாய் முகம் நோக்கினான். 'அம்மா! தையெல்லாம் இவ்வளவுநாள் சொல்லவில்லை? சரி, போகட்டும், இப்போது உணவு தானே வேண்டும்! இதோ அதற்கு வழி செய்கிறேன்' என்று அவன் புறப்பட்டான்.

அவன் பெரிய வீட்டு வேலையாள் மாதிரி உடையை வரிந்து கட்டிக் கொண்டான். ஒரு துண்டை எடுத்துத் தலையில் சுற்றிக் கொண்டான். உணவுப் பொருள்கள் விற்கும் ஒரு கடையில் தடதடவென்றேறி, அரிசி பருப்பு முதலியவற்றில் கையிட்டுக் கொண்டே கடைக்காரனை ஏற இறங்கப் பார்த்தான்.

'என்ன வேண்டும் தம்பி?' என்று கேட்டான் கடைக்காரன்.

'எனக்கு ஒன்றும் வேண்டாம். எங்கள் பண்ணையாருக்கு உடனடியாக ஒரு சாக்கு அரிசியும், ஒரு சாக்கு பருப்பு காய்கறி முதலிய சரக்குகளும் வேண்டுமாம். விலை பற்றிக் கவலையில்லை. சரக்கு நயமாகக் கொடுப்பாயல்லவா?' என்றான்.

செல்வம் தன்னைத் தேடி வருகிறது என்று மகிழ்ந்தான் கடைக்காரன். நல்ல அரிசி பருப்பு காய்கறிகளாகவே தேர்ந்து இரண்டு சாக்குகள் கட்டினான். தாராளமாக விலையுமிட்டுப் பட்டியலை நீட்டினான்.

‘பண்ணையார் இவ்வூர்ச் சத்திரத்தில்தான் இருக்கிறார்; பட்டியலுடன் உங்கள் பையனை அனுப்புங்கள். அவனிடம்