பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(214) ||

அப்பாத்துரையம் - 34

இருவரிடையேயும் பலநாள் சூடான வாக்குவாதமும் பேச்சு எதிர் பேச்சுச் சண்டைச் சச்சரவுகளும் நடந்தன. இடையிலே ஒரு குறும்பனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர அவர்களுக்கு நெடுநாளாயிற்று.

முக்குறும்பன் தொலைவிலிருந்து வேடிக்கை பார்த்து

மகிழ்ந்தான்.

முக்குறும்பன் குறும்புகளில் ஏமாற்றைவிட நகைச்சுவையே மிகுதி என்பதை இதற்குள் பலர் கண்டு கொண்டனர். அவன் புகழ் எங்கும் பரந்தது. அப்புகழில் ஈடுபட்டுக் கயத்தாற்றரசன் அவனுக்குச் சிறப்பு அழைப்புவிடுத்தான். அவ்வரசனிடம் கொம்மன், பொம்மன் என்ற இருவர் அரசவை விகடர்களாய் இருந்தனர். அவர்களுள் குறும்புப் போட்டிக்கேளிக்கையில் கலந்து கொள்ள வேண்டுமென்று அரசன் விருப்பம் தெரிவித்தான்.

அரசன் கொலுவில் கொம்மன். பொம்மனுடன் முக்குறும்பனுக்கும் சரியிருக்கை தரப்பட்டது. அரசன் போட்டியைத் தொடங்கி வைத்தான்.

"பேரவையோர்களே!

66

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற வள்ளுவர் வாய்மொழியைச் செயற்படுத்திக் காட்டுவதே இன்றைய போட்டி. உங்கள் மூவரில் உச்ச அளவான உயர் பேரவாவைத் தெரிவிப்பவருக்குத் தனிப் பரிசாக நான் அரசிளஞ் செல்வனுக்குரிய ஆடையணி மதிப்பு அளித்து நூறு பொன் பரிசும் தர இருக்கிறேன்.

"இப்போது மூவரும் உங்கள் திறமையைக் காட்டுங்கள்”. அரசன் இவ்வாறு அறிவித்தான்.

முதலில் கொம்மன் எழுந்தான்.

‘அரசே! எனக்கு எவ்வளவு பணம் வேண்டுமென்பதை நான் இலக்கத்தால் எழுதிக் காட்ட வேண்டுமானால், அதற்கு வானமே தாளாக, கடலே மைப் புட்டியாக அமைய வேண்டும். வான முழுவதும் தாளாகக் கொண்டு அது நிறைய இலக்கமிட்டெழுதிய அந்தத் தொகையளவான பணத்தை அரசர் என்மீது சொரிய வேண்டும் என்பது என் விருப்பம்!' என்றான்.